முன்னாள் அமைச்சர் நாப்சியா ஒமார்  காலமாரனார்! 

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.17-  முன்னாள் அமைச்சரும் அம்னோ மகளிர் பிரிவின் தேசிய தலைவியுமான டான்ஶ்ரீ நாப்சியா ஒமார், நேற்று  தமது 74ஆவது வயதில் காலமானார். சிறிது காலமாக கல்லீரல் புற்று நோயில் பாதிப்புற்றிருந்த அவர்,  அம்பாங் ஜெயாவிலுள்ள தமது மகனின் இல்லத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் அவரது உடல் கோலப் பிலாவுக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப் பட்டதாக அவருடைய நெருங்கிய உறவினரான டத்தோ யஹ்யா ஹமிட் தெரிவித்தார். 

கடந்த 1982ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை துணையமைச்சராக பதவியேற்ற  நாப்சியா ஒமார், 1987ஆம் ஆண்டில் பொது நிறுவனத்துறை அமைச்சராகவும் பின்னர் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கோலப்பிலா நாடாளுமன்றத் தொகுதியில் மூன்று தவணைகள் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS