சக மாணவனை துடைப்பத்தால் அடித்து  துன்புறுத்திய 9 மாணவர்கள் கைது! 

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.17- பிறந்த நாளன்று சக மாணவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் பாடிய பின்னர், அவரைத் துடைப்பத்தால் அடித்து துன்புறுத்திய 9 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள அந்த 17 வயது மாணவர்கள், புக்கிட் ஜெலுத்தோங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று சிலாங்கூர் சிஐடி தலைவர் மூத்த துணை ஆணையர் ஃபாட்ஸீல் அகமட் சொன்னார்.   அந்த 9  மாணவர்களும் கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார். 

“நேற்று காலை 11.30 மணிக்கு கைது செய்யப்பட்ட அவர்கள், பிற்பகல் 4.45 மணிக்கு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்” என்று அவர் தெரிவித்தார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, பாதிக்கப்பட்ட அந்த மாணவர் போலீஸில் புகார் கொடுத்த்தைத் தொடர்ந்து, அந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

“பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதியன்று அச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று ஃபாட்ஸீல் சொன்னார். 

அந்த மாணவனின் பிறந்த நாளன்று, அவனுக்கு வாழ்த்துக் கூறிய பின்னர், 8 மாணவர்கள் அவனை துடைப்பத்தால் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அண்மையில் பரவலானது. மாணவர்களின் பிறந்த நாளை அவர்கள் அவ்வாறு தான் கொண்டாடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS