பொதுத் தேர்தலில் போட்டியிட ‘ராஜா போமோ’ திட்டம்! 

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.17- ‘ராஜா போமோ’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் மலேசியாவின் ‘ராஜா போமோ’14-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக ‘ஹரியான் மெட்ரோ’ நாளிதழ் தெரிவித்துள்ளது. 

இப்ராஹிம் மாட் ஸின் என்ற அந்த ஆடவர், பேரா மாநிலத்தின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தனது எண்ணத்தை இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவிருக்கும் செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2014-ஆம் ஆண்டு காணாமல் போன எம்.எச்.370 மலேசிய விமானத்தை தம்மால் கண்டுப் பிடிக்க முடியும் என்று கூறி, பறக்கும் கம்பளம் மற்றும் மூங்கில் தொலைநோக்கி கொண்டு தம்மால் கண்டுப் பிடிக்க முடியும் என்று கூறி, கோலாலம்பூர் விமான நிலையத்தில் கோமாளித்தனமாக இந்த ‘ராஜா போமோ’நடந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது, கடந்த ஆண்டு, வட கொரியா அதிபரின் சகோதரரான கிம் ஜோங் நாம் மலேசியாவில் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியாவிற்கும் வட கொரியாவிற்கும் போர் எழக் கூடும் என்று கூறி, தனது ‘வித்தைகளை’ கொண்டு தம்மால் மலேசியாவிற்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று கூறி, அவ்வித்தையை அவர் விமான நிலையத்தில் அரங்கேற்றி, மலேசியர்களை கடுப்பேற்றினார்.  

அவரின் செய்கையை பலர் சாடிய வேளையில், கடந்த ஏப்ரல் மாதம், ஷாரியா நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடங்கப்பட்டது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS