இடது மார்பகத்தை இழந்த மாது!  மருத்துவமனை மீது வழக்கு!

சமூகம்
Typography

 கோலாலம்பூர், ஏப்ரல்.20- இருதயச் சிகிச்சையின் போது தமது இடது பக்க மார்பகத்தை இழக்க நேர்ந்ததாகக் கூறி, குடும்ப மாது ஒருவர் அரசாங்கத்தின் மீதும் மருத்துவர் மீதும் வழக்குத் தொடுத்தார்.

செர்டாங் மருத்துவமனையைச் சேர்ந்த இருதய நோய்ச் சிகிச்சை நிபுணரான டாக்டர் அப்துல் முய்ஷ் ஜாசித் மற்றும் மலேசிய அரசாங்கத்தை பிரதிவாதிகளாக அந்த மாது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இங்குள்ள உயர்நீதிமன்ற பதிவகத்தில் ஐ.பெர்தேமாவதி என்ற அந்தக் குடும்ப மாது தம்முடைய வழக்கறிஞர் டத்தோ டாக்டர் அருணன் செல்வராஜ் மூலம் சிவில் வழக்கைத் தாக்கல் செய்தார்.

பெர்தேமாவதிக்கு இருதய அறுவைச் சிகிச்சை டாக்டர் செய்தபோத அந்தச் சிகிச்சைக்கான வழிமுறைகளில் நிகழ்ந்த அலட்சியம் காரணமாக இடது பக்க மார்பகத்தை இழக்க நேர்ந்ததற்கு செர்டாங் மருத்துவமனை விளக்கம் தரத் தவறிவிட்டது என்றும் இதனால், பெர்தேமாவதி இந்த வழக்கைத் தொடுத்துள்ளார் என்றும் வழக்கறிஞர் டத்தோ அருணன் தெரிவித்தார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS