யார் அது? பேயா, நாயா? திருடனா? தீயாய் பரவிய காணொளி! -(VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், மே.19-அர்த்த இராத்திரியில் காரில் போய்க் கொண்டிருக்கும் போது சற்று தூரத்தில் கண்களுக்கு மங்கலாக நடுரோட்டில் ஓர் உருவம் அமர்ந்திருப்பதைப் பார்த்தால்...!

இம்மாத தொடக்கத்தில் தாமான் தாசெக் பிரடானாவுக்கும் புக்கிட் துங்குவுக்கும் இடையே இப்படியொரு சம்பவம் நடந்தது. காரை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் ஒருகணம் அதிர்ந்து போனார். 

  ## வீடியோ- நன்றி: தி சன்##

நடுரோட்டில் உட்கார்ந்திருக்கும் அந்த உருவத்தைப் பார்த்த பின்னர் ஒருகணம் தயங்கி நின்று, காரை மெல்ல பின்னோக்கிச் செலுத்தத் தொடங்கிவிட்டார். கிட்டத்தட்ட அந்த ஏரியாவை விட்டு வெளியேறியதும் அவசரமாக யூ-டேர்ன் எடுத்து தப்பித்தால் போதும் என்று பறந்து விட்டார்.

காரில் இருந்த டேஸ்போர்டு கேமிராவில் இந்தக் காட்சி தொடர்ந்து பதிவாகி இருந்தது. அதனை அவர் தன்னுடைய முகநூலில் பதிவேற்றம் செய்த போது ஏகப்பட்டவர்கள் பதட்டமாகி விட்டனர்.

ஆளுக்கு ஆள் கருத்துச் சொல்லத் தொடங்கினர். பலர் அது பேய் தான் என்றனர். அதனை மறுத்த சிலர் பேயைக் கேமிராவில் படம் முடிக்கவே முடியாது. ஆவிகள் கேமிராவில் அகப்படாது என்று திட்டவட்டமாக கூறினர்.

அப்படியானால், அது என்னவாக இருக்கும்? என்று சிலர் குழம்பினார். "நான் கூட ஒருமுறை ரோட்டு ஓரத்தில் ஒப்படியொரு உருவத்தை பார்த்தேன்" என்று சிலர் சொந்த அனுபவத்தை அள்ளி வீசினர்.

பார்ப்பதற்குத்தான் ஒரு மனித உருவம் போல் தோன்றுகிறதே தவிர, அதுவொரு மிருகமாகக் கூட இருக்கலாம் என்ற கருத்தையும் சிலர் ஆதரித்தனர். அது யாரோ வழிப்போக்கராக இருக்கலாம் என்ற விமர்சனமும் இடம்பெற்றது. 

ஆகக் கடைசியாக, அது வேறுயாருமல்ல, இரவு நேரத்தில் தனியாக வாகனத்தில் வருகின்றவர்களை மடக்குவதற்காக நடு ரோட்டில் அமர்ந்து கொண்டு, ஏமாந்து கார் ஓட்டுனர் இறங்கிச் சென்று என்னவென்று விசாரிக்கபோனால், பாய்ந்து மடக்கி அவருடைய உடமைக்களைப் பறித்துக் கொண்டு போகக் காத்திருக்கும் திருடனின் உருவமாகக் கூட இருக்கlலாம் என சிலர் சொல்ல, அதை பலர் ஆமோதிக்க, இந்தப் 'பேய்' வீடியோ விவகாரம் சமூக ஊடகங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS