மெக்னத்திற்கு வருமான வரி நோட்டீஸ்; 47 கோடி ரிங்கிட்செலுத்தக் கோரிக்கை!

சமூகம்
Typography

 கோலாலம்பூர், மே.20- வரி மதிப்பீடு மற்றும் அதற்கான அபராதம் என கிட்டத்தட்ட47 கோடியே 64 லட்சம் ரிங்கிட் செலுத்தவேண்டும் என்று நான்கு இலக்க பந்தய நிறுவனமான மெக்னம் மற்றும்டாதன் மற்றொரு பிரிவு நிறுவனமான மெக்னம் ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட்டிற்கு  வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2008ஆம் ஆண்டு மற்றும் 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரைக்குமான மதிப்பீடு என்ற வகையில் மெக்னம் 2 கோடியே 27 லட்சம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மெக்னம் ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட் நிறுவனம் 45 கோடியே 37 லட்சம் ரிங்கிட் வரை வரியும் அபராதமும் செலுத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக இந்த வரியும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தாங்களுடைய சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்துப் பார்த்த வகையில், வருமான வரித்துறை தலைமை இயக்குனரின் இந்த நோட்டீசை சட்டரீதியில் எதிர்கொள்ளப் போதுமான அடிப்படை இருப்பதை தாங்கள் கருத்தில் கொண்டிருப்பதாக மெக்னம் நிறுவனம் தெரிவித்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS