ஜாகிருக்கு சவுதி மன்னர் குடியுரிமை வழங்கினாரா? அதிர்ச்சியில் இந்திய அரசு!

சமூகம்
Typography

கோலாலம்பூர், மே.20- சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு சவுதி அரேபிய மன்னர் சல்மான் அந்நாட்டின் குடியுரிமையை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்திய நாட்டின் நெருக்கடியினால் இண்டர்போல் என்ற சர்வதேச போலீஸ் குழு ஜாகிரை கைது செய்யாமல் இருக்க மன்னர் சல்மான் இந்த செயலைப் புரிந்தார் எனக் கூறப்படுகிறது.

தீவிரவாதம் மற்றும் பண மோசடி குற்றங்களுக்காக ஜாகிர் மீது இந்திய அரசாங்கம் கைது ஆணையை பிறப்பித்தது. ஆனால், இந்த ஆணை வெளியான நேரத்தில் வெளிநாட்டில் இருந்த ஜாகிர் இந்தியா திரும்பவில்லை. ஜாகிருக்கு ஏற்கனவே நிரந்தர குடியுரிமையை வழங்கிய மலேசியாவில் அவர் அப்போது தஞ்சம் புகுந்தார். 

ஆனால், தற்போது மலேசியாவிலிருந்து சவுதிக்கு தப்பியுள்ள ஜாகிரின் கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டால் வேறு வழியின்றி அவர் இந்தியா திரும்ப வேண்டும். ஆனால், அதற்கு முன்கூட்டியே சவுதி அரேபியா, ஜாகிருக்கு குடியுரிமையை வழங்கி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தற்போது மும்பை கடப்பிதழ் அலுவலகம் ஜாகிரின் கடப்பிதழை ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றம் மூலம் மீண்டும் கைது வாரண்ட் ஒன்றை பெற்றுள்ளது. இதன்வழி இண்டெர்போல் இந்த சர்ச்சையில் தலையிட்டு ஜாகிரை கைது செய்யும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

ஜாகிருக்கு மலேசியா நிரந்தர குடியுரிமை சலுகை வழங்கியது இந்திய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த வேளையில், இண்டெர்போல் கோரினால் மலேசிய கண்டிப்பாக அவர்களுக்கு உதவும் என்று துணைப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS