ரோஸ்மாவுக்கு எதிராக அவதூறுகள்; சமூக ஊடகங்களுக்கு எச்சரிக்கை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜூன்.18- பிரதமரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பி வரும் சமூக ஊடகங்கள் மற்றும் இதர வகையான வெளியீட்டு ஊடகங்களுக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கை எடுப்பார் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மீது அடிப்படையற்ற, அவதூறான பல குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்பதால் அத்தகையோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவருடைய வழக்கறிஞர் நிறுவனமான நோர் ஹஜ்ரான் முகமட் நோர் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

டத்தின்ஶ்ரீ ரோஸ்மாவுக்கு எதிராக அவதூறு செய்யும் ஒரே நோக்கில் அடிப்படையோ, ஆதாரங்களோ இன்றி குற்றச்சாட்டுகளைப் பரப்பி, அவரது மதிப்பிற்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் மற்றும் ஊடக வெளியீடுகளில் இடம்பெறும் அனைத்து அம்சங்களையும் தாங்கள்  கண்காணித்து வருவதாக அது தெரிவித்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS