மருந்து விலைகள்: அமைச்சுக்கு அறிவிப்பது கட்டாயம்! -ஜெயேந்திரன்

சமூகம்
Typography

 கோலாலம்பூர், ஜூன்.18- மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளின் விலைகளைச் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கும் முறை விரைவில் கட்டாயமாக்கப்படும். இதனால் மருந்துகளை வாங்கும் போது பொதுமக்கள் அது குறித்து ஒரு முடிவை எடுப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

இதன்வழி மருந்துகளின் விலைகள் குறித்த பரிந்துரைகளைச் சுகாதார அமைச்சு செய்ய வழி பிறக்கும். நியாயமற்ற முறையில் மருந்துகளின் விலைகள் அதிகரிப்புச் செய்யப்படும் நிலையை மக்கள் எதிர்நோக்காமல் இதனால் தடுக்கப்படும். மருந்துகளின் விலைகள் அதன் பாக்கெட்டுகள் மீது இடம்பெறுவதற்கு வழிகாணப்படும்.

மேலும், மருந்துகளின் விலை நிலவரங்கள் வெளிப்படைத் தன்மையோடு அமைவதற்கு ஊக்கவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் துணைத் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் ஜெயந்திரன் தெரிவித்தார்.

பரிந்துரைக்கப்பட்ட விலையைக் காட்டிலும் மேலும் விலை குறைக்கப்படுவதற்கு பயனீட்டாளர்கள் விரும்பினால் கூட அதுபற்றி பரிசீலிக்கப்படும். எனினும், இந்தத் திட்டம் தொடக்க நிலையில்தான் இருக்கிறது என்று அவர் சொன்னார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS