கிரிக்கில் சாலையோரம் இரத்த வெள்ளம்! இறந்து கிடந்தது யானைக்குட்டி! 

சமூகம்
Typography

 ஈப்போ, ஜூன்.19- கிரிக்கிற்கு அருகே கிரிக்-ஜெலி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இரண்டு வயதுடைய யானைக் குட்டி ஒன்று இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தது. இச்சம்பவம் இங்கிருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் நிகழ்ந்துள்ளது.

அந்த யானைக் குட்டியின் சடலம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை மணி 7 அளவில் கண்டுபிடிக்கப்பட்டது என பேராக் மாநில வனவிலங்கு துறை மற்றும் தேசிய பூங்காக்களின் தலைவர் லூ கியான் சியோங் தெரிவித்தார்.

“என்னதான் இம்மாதிரியான சம்பவங்கள் நிகழ்வது மிக அரிது என்றாலும், இந்த பாதையைப் பயன்படுத்தும் மோட்டார் வாகனமோட்டிகள் எப்பொழுதுமே மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என்றார் அவர்.

“மேலும், இங்கு ஏற்கனவே வாகனமோட்டிகளை எச்சரிக்கைச் செய்யும் வகையில் சாலையின் ஓரத்தில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதி என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்கள்தான் அக்கரையுடனும் கவனத்துடனும் பயணிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கவனமாக வாகனங்களை செலுத்தவேண்டும் என்று லூ கேட்டுக்கொண்டார்.

மேலும், பாதுகாக்கப்பட்டு வரும் வனவிலங்குகளாகிய யானை, புலி, தாப்பீர், சிறுத்தை போன்றவற்றின் நடமாட்டத்தைக் கண்டாலும் உடனடியாக மாநில வனவிலங்கு துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு வாகனமோட்டிகளிடம் அவர் வலியுறுத்தினார்..

“இது ஏனெனில் அச்சம்பவங்களைப் பற்றி மேலும் விரிவாக விசாரணை நடத்தவும். மேலும், கேட்பாரின்றி இறந்துக் கிடக்கும் விலங்குகளைக் குறைந்தபட்சம் சாலையிலிந்து அப்புறப்படுத்துவதற்கும் உதவும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே,  குறிப்பிட்னந்தச் சாலை வளையானது, பாரம்பரியமும் இயற்கைச் சுற்றுச்சூழல் தன்மை கொண்ட சுற்றுலா தளமாகவும் கருதப்பட வேண்டும் என்று மலேசியச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அண்ட்ரூ செபஸ்தியன் குறிப்பிட்டார்.

பெலும் தெமெங்கோர் வனப் பகுதியைச் சார்ந்து வெளிவந்த பல ஆய்வுகளைப் வைத்துப் பார்க்கையில் வாகனமோட்டிகள் கண்டிப்பாக கவனமாக இச்சாலையைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

"இது விபத்துகளைத் தடுக்க மட்டுமல்ல அந்த உயிரினங்களின் மீது அன்பும் அரவணைப்பும் பரிவும் காட்டவும். அதே சமயம் வன விலங்கு சட்டத்தை நாம் பின்பற்றவும் வழிசெய்யும்" என்று அவர் மேலும் சொன்னார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS