மலேசியர்கள் அதிகம் உண்ணாத உணவுகளுக்கு ஜி.எஸ்.டி வரி!

சமூகம்
Typography

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.19- அடுத்து வரும் ஜூலை முதல் தேதி  தொடங்கி மலேசியர்கள் சாதாரணமாக உட்கொள்ளாத அறுபதுக்கும் மேற்பட்ட உணவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி எனப்படும் பொருள், சேவை வரி விதிக்கப்படும்.

அவற்றுள் மலேசியர்கள் அன்றாட வழக்கில் அதிகம் பயன்படுத்தாத குறிப்பிட்ட சில வகை கடல் உணவுகள், காய்கறிகள், பழங்கள், தேநீர், காப்பி, மாசாலா ஆகியவை அடங்கும்.

இதைப் பற்றிய முழுமையான அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று சுங்கத் துறை தலைமை இயக்குனர் டத்தோ சுப்ரமணியம் துளசி தெரிவித்தார்..

அவ்வகையில் ஜி.எஸ்.டி விதிக்கப்படும் புதிய உணவுப் பொருள்களில் விலாங்கு மீன், வாளை மீன் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பழ வகைகளான அவோகாடோ, அத்திப்பழம், திராட்சை, பீச் பழம், செர்ரி, மற்றும் பெர்ரி ஆகியவையும் அடங்கும்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS