ஜார்ஜ்டவுன், ஜூன்.19- மலேசியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமான, மாணவன் டி.நவின் தாக்கப்பட்டு சுயநினைவு திரும்பாலேயே மரணமடைந்த சம்பவம் தொடர்பில் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதியன்று புக்கிட் குளுக்கோரில் இரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் இடையே இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக 18 வயதுடைய ஜே.ராகசுதன், 18 வயதுடைய எஸ்.கோகுலன் மற்றும் 17 வயது, 16 வயதுடைய இதர இருவர் ஆகிய நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
முன்பு, இவர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டது மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் சட்டத்தின் 148 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அது மாற்றப்பட்டு குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படவுள்ளது. இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் ஒருசேர வாசிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட்முகமட் அமின் ஷாகுல் ஹமிட் முன்னிலையில் இடம் பெற்ற இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னர் வழக்கு செப்டம்பர் 28ஆம் தேதி விசாரணை வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், நவினுடன் இருந்த பிரவின் என்ற 18 வயது மாணவனை கடுமையான காயங்களை விளைவிக்கும் வகையில் தாக்கியதாக இவர்களுக்கு எதிராக செசன்ஸ் நீதிமன்றத்தில் மற்றொரு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
இந்த நால்வருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட ஆர்.பிராவீன் என்ற 18 வயது நபர், போலீஸ் சாட்சி என்ற வகையில் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
காயம் விளைவித்த வழக்கில் பிராசிகியூசன் தரப்பில் டிபிபி லிம் சாவ் சிம் ஆஜாராகியுள்ளார். இந்த வழக்கு ஆகஸ்டு 21ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.
ஜூன் 9ஆம் தேதி தாக்கப்பட்ட டி.நவின், ஜூன் 15ஆம் தேதி பினாங்கு மருத்துவமனையில் சுய நினைவு திரும்பாலேயே உயிர்நீத்தார். ஓரினப்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இவர்.முதுகில் தீக் காயங்களை ஏற்படுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
நவின் மரணம்: ராகசுதன், கோகுலன் உள்பட 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு!
Typography
- Font Size
- Default
- Reading Mode