பெட்டாலிங் ஜெயா, 22 மார்ச்-  மலேசியாவின்  முக்கிய காலை உணவான நாசி லெமாக் அனைத்துலக நிலையில் சிறந்த 10 காலை உணவுகளுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.     

 

மேலும் செய்திகள் விரைவில்..

புத்ராஜெயா, மார்ச் 21-  புத்ராஜெயாவில் அமைந்துள்ள பொதுச் சேவை துறை ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியிலிருந்து விழுந்த   4 வயது சிறுவன் மரணமடைந்தான்.  

முன்னதாக காலை 8.30 மணியளவில் சம்பந்தப்பட்ட அந்த சிறுவன்    தரையில்  கிடந்தவாறு வலியால் முனகிக் கொண்டிருந்ததை  துப்புரவு பணியாளர் ஒருவர் கண்டுள்ளார். உடனே அருகில் இருந்த மற்றொரு துப்புரவு பணியாளரை அழைத்து அச்சிறுவனை தூக்கி நிழலுக்குக் கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார், இதனையடுத்து, அங்குள்ள குடியிருப்பாளர் ஒருவர் உடனடியாக அச்சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால்  காலை 10.15 மணியளவில் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிழந்தான். உள்ளுறுப்புகளில்  ரத்தம் வெளியேறியதால் சிறுவன் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது. 

கோலாலம்பூர், மார்ச் 21- ஷரியா நீதிமன்றத்தினால் தம்முடைய மணமுறிவுக்கு  ஈடாக அளிக்கப்பட்ட ஆறுதல் வெகுமதி  போதாது என்று சரவா ஆளூனர் துன் அப்துல் தாயிப்  மாமுட்டின் முன்னாள் மருமகள் மேல்முறையீடு செய்திருக்கிறார்.  அந்தத் தொகை 100 மில்லியனாக அதிகரிக் கப்படவேண்டும் என்றுஅவர் கோரியிருக்கிறார்.

இங்குள்ள ஷரியா உயர்நீதிமன்றத்தில்  ஷனாஸ் மஜிட் (வயது 53) என்ற அவர், தம்முடைய ஷரியா வழக்கறிஞர்களான டாகடர் ரபி முகமட்ஷாபி மற்றும் டத்தோ அக்பர்டீன் அப்துல் காதர் ஆகியோர் மூலமாக இந்த மேல் முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மார்ச் 10ஆம் தேதி அளித்த தீர்ப்பில் ஷரியா நீதிபதி முகமட் அப்துல் கரீம் வழங்கிய 30 மில்லியன் இழப்பீடு தமக்கு திருப்திகரமானதாக இல்லை என்று ஷனாஸ் மஜிட் கூறியிருக்கிறார். இந்தத் தொகையை 100 மில்லியனாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மேமாதம் 11ஆம் தேதி ஷனாஸ் மஜிட்டிற்கும் டத்தோஶ்ரீ மமூட் அபு பெக்கிருக்கும் இடையே விவாகரத்து முடிவானது. 

பெட்டாலிங் ஜெயா, 21 மார்ச்-   நாட்டில் கடும் வெயில் நிலவி வருவதைத் தொடர்ந்து கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மூடப்படும் என கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளதாக  அமைச்சர் டத்தோ ஶ்ரீ மாட்சிர்  காலிட் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று  நாட்களாக   சம்பந்தப்பட்ட மாநிலங்களில் வெப்பம் 39 செல்சியசிலிருந்து குறையாததையடுத்து, மாணவர்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

சிட்னி, மார்ச் 21- மாஸ் நிறுவனத்தின் காணாமல் போன  எம்எச் 370 பயணிகள் விமானத்திற்கு உரியது என நம்பப்படும் சிதைந்த இரண்டு பாகங்கள் புலனாய்வுக்காக ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்விரு பாகங்களும் மொசாம்பிக் நாட்டின் கடலோரத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தச் சிதைந்த பாகங்களில் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் மற்றொரு பாகத்தை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒரு வரும் கண்டுபிடித்தனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம்  கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்று கொண்டிருந்த போது 239 பயணிகளுடன் காணாமல் போனது. நீண்ட காலமாகத் தேடும் பணி நீடித்துவரும் நிலையில், ஓரிரு சிதைந்த பாகங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே மொசாம்பிக்கில் இருந்து விமானத்தின் இரு சிதைந்த பகுதிகளும், ஆஸ்திரேலியா வந்து சேர்ந்திருப்பதை அந்நாட்டின் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியது.

இந்தப் பாகங்கள், எம்எச் 370 விமானத்தைப் போன்ற அதே ரகமான போயிங் 777 விமானத்தின் சிதைந்த பாகமாக இருக்கும் சாத்தியம் கூடுதலாக இருப்பதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

போயிங் விமான நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் ஆஸ்திரேலியா தற்போது சிதைந்த பாகங்கள் குறித்த ஆய்வைத் தொடங்க விருக் கிறது. இதுவரையில் இந்திய பெருங்கடல் தீவான ரீயூனியனில் கண்டுடிக்கப்பட்டுள்ள ஒரு விமானத் துண்டுதான் கிட்டத்தட்ட காணாமல் போன விமானத்துடன் பொருந்தி வருபவதாகக் கருதப்படுகிறது.

 

ஆண்டுதோறும் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு பாத யாத்திரை செல்கின்றன பகதர்களில் பலருக்கு இந்தப் பாட்டி நன்கு அறிமுகமானவர். இவரது பெயர் தஞ்சம்மா. 63 வயதை எட்டிவிட்ட இவர், பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பசியாற்றும் தொண்டினைச் செய்து வருகிறார்.

"என்ன பாட்டி வேண்டுதலா?" என்று கேட்டபோது, "வேண்டுதல் என்று எனக்கு எதுவும் இல்லையப்பா.., களைப்போடு இந்தப் பாதையை கடந்து போகின்றவர்களின் சிரமத்தை தணிக்கலாமே என்று அவர்களுக்கு சுக்குக் காப்பி போட்டுத் தந்தேன்" என்கிறார்.

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டி தஞ்சம்மா, லஞ்சாங் அருகில், இப்படி சுக்குக் காப்பியில்தான் ஆரம்பித்தார். இப்போது பாணங்களுடன் சைவமாக வடை பலகாரங்களும் பக்தர்களுக்கு வழங்கி அவர்களின் பசியாற்றுகிறார். பாட்டியின் இந்தச் சேவை தொடரட்டும் என்று வாழ்த்துவோம்.

 

 

மெந்தகாப், மார்ச் 20- பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மலேசியாவின் புகழ்பெற்ற மாரான் ஸ்ரீ மரத்தாணடவர் ஆலயத்தை நோக்கி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

பத்துமலை திருத்தலத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பாத யாத்திரை பக்தர்கள், பல்வேறு அமைப்புக்களின் சார்பில் பங்கேற்றுள்ள போதிலும், ஒரே நோக்கத்தோடு மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தை நோக்கி யாத்திரை செல்கின்றனர்.

மலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் தகிக்கிறது என்ற நிலையிலும் பாத யாத்திரை தொடர்கிறது. போதுமான பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை, அனைத்துத் தரப்பு ஏற்பாட்டாளர்களும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக, முதலுதவி வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் எனப்படும் அவசர உதவி வாகனம் ஆகியவை தயார் நிலையில் பாத யாத்திரை பக்தர்களைப் பின் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

பத்துமலையில் இருந்து நேற்று புறப்பட்ட பக்தர்கள் குழு ஒன்று லஞ்சாங்கைக் கடந்து மெந்தகாப் ஓய்வு முகாமில் உள்ளனர் வெப்பம் தணிந்த வேளையில் மீண்டும், அவர்கள் நடைப் பயணத்தைத் தொடங்குவர்.

 

More Articles ...