சிகாமட், 18 மார்ச்- நாட்டில் நிலவி வரும்  கடுமையான  வெயிலைத் தொடர்ந்து ஜொகூர், சிகாமட்டில் காவல்த்துறை பயிற்சியாளர் ஒருவர்  வெப்ப  பக்கவாதம் தாக்கி மரணமடைந்துள்ளார்.  

அசிசான் அயோப் என்ற அந்த 23 வயது ஆடவர், புதன்கிழமை  இரவு 10.30 மணிக்கு சிகாமட் மருத்துவமனையில் மரணமடைந்தார். 

சம்பந்தப்பட்ட அந்த பயிற்சியாளர்   திடலில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின் போது வெப்ப பக்கவாதத்தால் நிலைக்குலைந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது செல்கள் அனைத்தும்  செயலிழந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. 

புதுடில்லி, மார்ச் 17- இந்திய குடியுரிமையைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ள மலேசிய விமானச் சேவை  தொழிலதிபரான டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ், விரை வில் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"எனக்கான குடியுரிமையை அரசு இந்திய அங்கீகரிக்குமானால், மிகப்பெரிய விருந்து நடத்தப்படும்" என்று அவர் ஹைதராபாத்தில் செய்தியாளர்க ளிடம் தெரிவித்தார்.

வெளி நாட்டு இந்திய பிரஜை என்கிற அந்தஸ்தை டான்ஶ்ரீ டோனி பெறுவாரேயானால், இந்தியாவில் அவரது விமானச் சேவை  நிறுவனத்தின் முழுப் பங்குரிமையையும்  அவரே பெற்றிருப்பதற்கு வழி பிறக்கும். 

வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய விதிமுறைகளை அவர் தவிர்ப்பதற்கு இது உதவும். 51 வயதுடைய டோனிக்கு இந்த சிறப்பு குடியுரிமை கிடைக்கும் பட்சத்தில், ஏர் ஆசியாவுக்கு எதிர்ப்புக் காட்டுவோரை அவரால் சமாளிக்க முடியும்.

49 விழுக்காடு பங்குரிமையை மட்டுமே கொண்டிருக்க முடியும் என்ற நிலையில் ஏர்  ஆசியா நிறுவனம் இந்தியாவிலுள்ள தனது நிறுவனச் செயல்பாடுகளை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறது என்று அதன் போட்டி நிறுவனங்கள் குற்ற ஞ்சாட்டி வரு கின்றன.

பிரிட்டனில் படித்துப் பட்டம் பெற்றவரான டான்ஶ்ரீ டோனி, வெளிநாட்டு இந்தியப் பிரஜை என்ற தகுதியைப்பெறுவாரேயானால், இந்தியாவில் 100 விழுக்காடு பங்குரிமையை  கொண்டு செயல்படமுடியும். தற்போது ஏர்ஆசியா இந்தியா நிறுவனம் டாட்டா குழுமத்துடன் கூட்டாகச்  செயல் படுகிறது.

டான்ஶ்ரீ டோனியின் பெற்றோர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "என்னை ஓர் அன்னியனாகப் பார்ப்பது என்பது எனக்கு விநோதமாக இருக் கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 17- நம் நாட்டில் ஏறக்குறைய 7000 இந்துக்கள் தவறுதலாக இஸ்லாமியர்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர். இப்பிரச்சனைக்கு த் தீர்வு காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக 8 அரசு சார்பற்ற அமைப்புகள் தலைமையிலான சிறப்புக்குழு  அறிவித்துள்ளது.

தீபகற்ப மலேசியாவில் வசிக்கும் குறைந்த வருமானம்  பெறும் இந்தியர்கள் தான்  பெரும்பாலும், இந்துவிலிருந்து   முஸ்லிம்களாக ஆவணப்படுத்தப்படுகிறார்கள் என அண்மையில் மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான்   அம்பலப்படுத்தியிருந்தார்.

ஏறக்குறைய  8 இந்து அமைப்புகளை உள்ளடக்கிய இந்த சிறப்பு நடவடிக்கைக்குழுஇப்பிரச்சனையை எதிர்நோக்கும் சுமார் 500 இந்தியர்களுக்கு உதவி வருகிறது.

"இது வரை   இப்பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் 81 பிள்ளைகளுக்கு உதவியுள்ளோம்என இன்று இதன் தொடர்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சிலாங்கூர் இந்து இளைஞர்  ஆலோசனைப் பிரிவு தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.

இந்து மதத்திலிருந்து  இஸ்லாமியர்களாக மாற்றப்பட்ட   7000 பேரும், மதம் மாறும் எண்ணமோ அல்லது அவசியமோ அறவே இல்லாதது கவனிக்கத்தக்க ஒரு விவகாரமாகும். நம் நாட்டில்    61.3 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள்.  இந்துக்கள் 6.3 விழுக்காட்டினர்.   அப்படி இருக்க  குறைந்த வருமானம்  பெறுபவர்கள் குறிப்பாக இஸ்லாமியர்களாக மாற்றப்படுவதன் பின்னணி குறித்து ஆராய வேண்டியுள்ளது.

இவ்வாறு தவறுதலாக ஆவணப்படுத்தப்பட்டவர்கள் 4 கூறுகளாகப் பிரிக்கலாம்.  அனுமதியின்றி மதம் மாற்றப்படுதல் மற்றும் இந்துவாக வளர்க்கப்பட்டு பின்னர் முஸ்லிமாக ஆவணப்படுத்தப்படுதலால்  130 பேரும், தவறுதலாக ஆவணப்படுத்தப்பட்ட்தால் 51 பேரும்,   திருமணம் செய்யாமல் கருத்தரித்தல் மற்றும் தங்கள் வசதிக்காக 253 பேரும், குடும்ப  பிரச்சனை காரணமாக 75 பேரும் இதுவரை தவறுதலாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

ஒரு முஸ்லிம்  ஷரியா நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகே  தாங்கள் விரும்பும் மதத்திற்கு மாற முடியும். அவ்வாறு ஒரு முஸ்லிம் மதம் மாறுவதும் லேசுபட்ட காரியம் அல்ல. அப்படியிருக்கையில் இந்துக்கள் தங்களின் அனுமதியின்றி இஸ்லாமியராக மதம் மாற்றப்படுவது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகும்.  இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக,  8 பொது அமைப்புகள் தலைமையிலான இந்த  சிறப்புக்குழு 18 வயதுக்குட்பட்ட இந்தியர்கள்  பெற்றோர்களின் அனுமதியின்றி மதம் மாற முடியாது என்ற சட்டத்தைக் கொண்டு வர பிரதமரோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்விவகாரத்தை முற்றிலும் களையும் வகையில் விரைவில் தாங்கள்  இணையப் பதிவு நடவடிக்கையையும் தொடங்கவுள்ளதாக அருண் துரைசாமி, இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

 

கோலாலம்பூர், மார்ச் 17-   வத்திகன்,  கம்போடியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான மலேசியத் தூதர்களுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன. கடந்த 2014 -ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி வரை லெபனானுக்கான மலேசியத் தூதராகப் பணியாற்றிய இளங்கோ கருப்பண்ணன்   சிங்கப்பூருக்கான மலேசியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து டான் ஶ்ரீ பெர்னார்ட் டொம்போக் வத்திகனுக்கான தூதராகவும்,  கம்போடியாவுக்கான  தூதராக  டத்தோ ஹசான் மாலேக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

புத்ராஜெயா, மார்ச் 17-  புத்ராஜெயா குடிநுழைவு இலாகா, 200 சட்ட விரோதத் தொழிலாளர்கள்..ஐ சிட்டிபேரங்காடியில் கைது செய்துள்ளது. இந்த மூன்று மணி நேர அதிரடி வேட்டையில் 150 உணவு மையங்களும், 500க்கு மேற்பட்ட அந்நிய பிரஜைகளும் சோதனையிடப் பட்டனர்.

 

உள்துறை துணை அமைச்சர் மசிர் குஜாட் கூறுகையில், சிக்கிய சட்ட விரோத தொழிலாளர்களில், வங்காளதேசிகள், இந்தோனிசியர்கள், மியன்மார் பிரஜைகள் ஆகியோர் அடங்குவர். பல உணவு மைய உரிமையாளர்கள், வெளிநாட்டு பிரஜைகளை வேலைக்கு வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனையை மேற்கொண்டனர் என்று அவர் கூறினார்.

 

முறையான அடையாள ஆவணங்கள் இல்லாமை, காலாவதியான ஆவணங்களுடன் தங்கியுள்ளோர், தங்களது பயண ஆவணங்களை தவறான முறையில் பயன்படுத்துவோர் எனப் பலதரப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் புக்கிட் ஜாலில் குடிநுழைவு தடுப்புக் காவலில் விசாரணைக்கு வைக்கப்பட்டுள்ளனர். 120 அதிகாரிகள் இந்தச் சோதனை மேற்கொண்டனர். நாடு தழுவிய அளவில் இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

ஜோர்ஜ்டவுன், மார்ச் 17- இங்கு சுங்கை பினாங்கில் உள்ள பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் 13 வயது மதிக்கத் தக்க சிறுமி ஒருவர் 21-வது மாடியிலிருந்து விழுந்து மரணமடைந்தார்.

விஷாலினி என்ற அந்த 13-வது சிறுமியிடம் அவரது தாய் அருகிலுள்ள கடைக்கு சில பொருட்கள் வாங்க அனுப்பியதாக அவரது தந்தை பி.மணியம் (வயது 41) தெரிவித்தார்.

ஆனால் வீட்டிலிருந்து சென்ற அவர் வெகு நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனிடையே பலத்த சத்த்த்தைக் கேட்ட அண்டை வீட்டார், விஷாலினி கீழே விழுந்து விட்ட்தாக  அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

என் மனைவி, 3 மகள்கள் மற்றும் மகனும் விஷாலினியின் மரணத்தால் அதிர்ச்சியில் உள்ளனர் என பி.மணியம் பினாங்கு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு வெளியே தெரிவித்தார்.

மாடியிலிருந்து விழுந்த விஷாலினி, உயிரோடு இருந்த்தாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பிறகு, அவரது உயிர் பிரிந்த்தாகவும் அவர் கூறினார்.

மகளை இழந்த துக்கத்தில் விஷாலினியின் தாயின் கதறியது, காண்போரின் இதயத்தைப் பதைபதைக்க வைத்தது.

 

 

கோலாலம்பூர், மார்ச் 16- மாற்று  உறுப்புத் தானத்திற்காக காத்திருக்கும் நோயாளிகளில் 99.8 விழுக்காட்டினர் சிறுநீரக நோயாளிகள். ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தங்களின்  உறுப்புகளை தானம் செய்ய முன் வருகின்றனர். இதனால், ஒரு நோயாளி தனக்கேற்ற ஒரு மாற்று உடல் உறுப்பைப் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.

 

மேலும், 19,895 நோயாளிகள் தங்களுக்கான மாற்று  உறுப்பு கிடைக்காமல் காத்திருக்கின்றனர். அதில் 19,871 பேர் மாற்று சிறுநீரகத்திற்காகவும், 10 பேர் கல்லீரலுக்காகவும், 6 பேர் இருதயத்திற்காகவும் மற்றும் 8 பேர் நுரையீரலுக்காக காத்திருக்கிரார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

மலேசியாவில் உறுப்புத் தானம் செய்வோரின் விகிதம் பத்து லட்சம் பேருக்கு ஒருவர் என்கிற நிலையிலேயே இருக்கிறது என்ற நாடாளுமன்றத்தில் சரவா எம்.பி. ஒருவரின் எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த போது டத்தோஶ்ரீ சுப்ரமணியம் சுட்டிக்காட்டினார்.

 

மலேசியர்கள் தாமாகவே, தங்களின் உறுப்புகளைத் தானம் செய்ய அதிக மானவர்கள் பதிவு செய்கிறார்கள் தேவைக்கு குறைவான எண்ணிக்கையிலேயே நமக்கு மாற்று உறுப்புகள் கிடைக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

 

இந்நிலையால் பலர், பலர் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று உறுப்பு மாற்றல் அறுவைச் சிகிச்சைக்களை மேற்கொள்கின்றனர். இதை நாம் ஆதரிக்க முடியாது. பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கும் சமூகத்தினரை, உறுப்புத் தானம் என்ற பெயரில் சுரண்டுவது ஏற்கத்தக்கது அல்ல என்றார் அவர்.

 

மலேசிய முழுவதும் தற்போது உறுப்பு தான விழிப்புணர்வு பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலேசியர்களுக்கு இது மாதிரியான விஷயங்களில் அதிக விழிப்புணர்வு தேவை. மக்கள் அவர்களாகவே முன் வந்து தங்களின் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று டத்தோஶ்ரீ சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்தார்.

 

More Articles ...