63ஆவது பிலிம்பேர் விருது வழங்கும் விழா

இந்தியச் சினிமா
Typography

சினிமா நடிகர்களுக்கு நல்ல அங்கீகாரம், அவர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் தான். 2016ஆம் ஆண்டின்  பிலிம்பேர் விருது வழங்கும் விழா ஐதிராபாத்தில் நடந்தது.

63ஆவது முறையாக நடைப்பெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டனர். காக்கா முட்டை, சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது. ‘தனி ஒருவன்’ படத்திற்காக இயக்குனர் மோகன் ராஜ சிறந்த இயக்குனருக்கான விருதையும் இப்படத்தில் புதிய பரிமாணம் எடுத்திருக்கும் அர்விந்த் சாமி சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும் பெற்றனர்.

மேலும், ‘ஐ’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இசைபுயல் ஏ ஆர் ரஹ்மானும் சிறந்த நடிகருக்கான விருதை விக்ரமும் பெற்றுள்ளனர். இப்படத்தின் ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ எனும் பாடல் வரிகளுக்காக மதன் கார்க்கி சிறந்த பாடலாசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் பாடியிருக்கும் சிட் ஶ்ரீராம் ‘என்னோடு நீ இருந்தால் என்ற பாடலை பாடியதற்காக சிறந்த பாடகர் விருதை பெற்றார்.  

‘நானும் ரவுடி தான்’ படத்திற்காக நயன்தாரா சிறந்த நடிகைகான விருதைப்பெற்றார். 

ராதிகா ‘தங்கமகன்’ திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதையும் ‘என்ன சொல்ல’ எனும் பாடலுக்காக ஸ்வேதா மோகன் சிறந்த பாடகி விருதையும் பெற்றுள்ளனர்.

 சிறந்த நடிகை நடிகருக்கான விமர்சகர் விருதை ‘தனி ஒருவன்’ படத்திற்காக ஜெயம் ரவியும் ’36 வயதினிலே’ படத்திற்காக ஜோதிகாவும் பெற்றனர்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS