சுவாதி கொலை வழக்கு: சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட ராம்குமார் 

தமிழகம்
Typography

சென்னை,  4 ஜூலை-  சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட  வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளளார்.   கைது செய்யப்பட்ட அன்று ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் ராம்குமாருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட   ராம் குமார் தற்போது   ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ராம் குமாரின் உடல் நிலை பரிசோதனைக்குப் பிறகு அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் நிறுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். செல்லையிலிருந்து ஆம்புலன்சில் 12 மணி நேரம் பயணம் செய்து  ராம் குமார் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS