Home | மலேசியா | பள்ளிகளில் மாணவர்களை புத்திசாலிகளாக்கும் “மாய” மாத்திரை: பெற்றோர் அதிர்ச்சி

பள்ளிகளில் மாணவர்களை புத்திசாலிகளாக்கும் “மாய” மாத்திரை: பெற்றோர் அதிர்ச்சி

By
Font size: Decrease font Enlarge font
பள்ளிகளில் மாணவர்களை புத்திசாலிகளாக்கும் “மாய” மாத்திரை: பெற்றோர் அதிர்ச்சி

 

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்டு 29- மாணவர்களைப் புத்திசாலிகளாக்கும் மாய மாத்திரைகள் பள்ளிகளில் விநியோகம் செய்துவது அம்பலமாகியுள்ளது.

“Dimensi 108” விவேக மாத்திரைகள் என கருதப்படும் இந்த உணவு பிற்சேர்க்கை மாத்திரைகள் பிள்ளைகளின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களை சொல்பேச்சு கேட்பவர்களாகவும், விடாமுயற்சி மிக்கவர்களாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாகவும் உருவாக்கும் என சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சந்தை பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அறிந்த பெற்றோர்கள், ஸ்டார் ஆங்கில நாளெட்டைத் தொடர்புகொண்டு இவ்விவரங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து இவ்விஷயம் அம்பலமாகியுள்ளது. அப்பெற்றோர், தனது பிள்ளை படிக்கும் ஆறாம் வகுப்பில் இந்த விவேக மாத்திரைகளை ஆசிரியர்கள் நிர்பந்தப்படுத்தி வாங்க வைப்பதாகக் கூறினார்.,

இதனிடையே மற்றொரு பெற்றோர், தமது மகளை அம்மாத்திரைகளைத் திரும்ப ஆசிரியர்களிடமே ஒப்படைத்துவிடுமாறும், அம்மாத்திரைகளுக்கான பணம் கொடுக்க மறுத்ததாகவும் குறிப்பிட்டார்.

இதே போல மற்ற சில மாணவர்களும் தங்கள் ஆசிரியர்களிடம் அம்மாத்திரைகளை ஒப்படைத்தபோது, அந்த ஆசிரியர்கள் “பின்னர், யு.பிஎஸ்.ஆர் தேர்வில் தாங்கள் ஏன் சிறந்த தேர்ச்சி பெறவில்லை என புலம்ப வேண்டாம்” என கூறியதாக அப்பெற்றோர் தெரிவித்தார்.

“உங்களால் நம்ப முடிகிறதா? தேர்வுக்கு சொந்த முயற்சியில் விடாமுயற்சியுடன் படித்து தேர்ச்சி பெறுவதற்கு ஊக்குவிக்க வேண்டிய ஆசிரியர்கள் இதுபோன்ற மாய முயற்சிகளில் ஈடுபட வைக்கலாமா?” என்றும் அப்பெற்றோர் கேள்வியெழுப்பினார்.

 

இதுகுறித்து, சில பெற்றோர்கள் சுகாதார அமைச்சுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இவ்விவகாரத்தை அமைச்சு ஆராயும் என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார். 

Subscribe to comments feed Comments (0 posted)

total: | displaying:

Post your comment

Please enter the code you see in the image:

Captcha
  • Email to a friend Email to a friend
  • Print version Print version
  • Plain text Plain text

Tagged as:

No tags for this article

Rate this article

0