தில்லுக்கு துட்டு இந்தியில் ரீமேக்

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜூலை 14- சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் இந்தியில் மறுபதிப்பு செய்யப்படபோவதாக சினிமா வட்டாரத்தில் செய்தி பரவியுள்ளது. 

லொள்ளு சபா ராம்பாலா இயக்கத்தில் வெளியான படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இப்படத்தை இந்தியிலும் தெலுங்கிலும் மறுபதிப்பு செய்திட ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவாம்.

சந்தானம் கதாநாயகனாக நடித்த அவரின் முந்தைய படங்களான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படி தான் போன்ற படங்கள் வெற்றியடையவில்லை. ஆனால், கடந்த வாரம் வெளிவந்த தில்லுக்கு துட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நகைச்சுவைக் கலந்த திகில் படமான இப்படத்தில் மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திரமும் பெரும் வரவேற்பை பெற்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS