தித்திவங்சா பூங்காவில் "சிறார் காமுகன்களா?": வைரலாகும் முகநூல் பதிவு

சமூகம்
Typography

கோலாலம்பூர், 16 ஜூலை- தலைநகரில் அமைந்துள்ள தித்திவங்சா பூங்காவுக்குச் சென்றிருந்த போது,  சில ஆடவர்கள் முன்பின் அறிமுகமில்லாத சிறார்களோடு  நெருக்கமாக புகைப்படம் எடுத்து பரிமாறிக்கொள்வதை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்து ள்ளார் முகநூல் பயனாளர் ஒருவர்.  இது குறித்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ள பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தலைநகர் மக்கள் குடும்பத்தோடு அடிக்கடி வந்து போகும்  பொழுது போக்கு தளமான  தித்திவங்சா பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறார்களின் அருகில் சென்றும், அவர்களைத் தொட்டும் புகைப்படம் எடுத்த ஐந்து இளைஞர்களின் செயல் வழக்கத்திற்கு மாறாக தென்பட்டதால்  அவர்களை விசாரித்துள்ளார்  எம்.டி ஶ்ரீதரன் என்ற அந்த முகநூல் பயனாளர். 

"முதலில் ஒருவர் மட்டுமெ விளையாடிக்கொண்டிருந்த சிறார்களைத் தம் கைப்பேசியில் படம் பிடித்ததைப் பார்த்தேன். அவன் என்னத்தான் செய்துகொண்டிருக்கிறான் என சற்று  கூர்ந்து கவனித்த போது,   புகைப்படம் எடுத்த நபர் பின்னர் இதர 4 ஆடவர்களுடன் சேர்ந்து 5 பேராக  தாங்கள் பிடித்த புகைப்படங்களைப் பரிமாறிக்கொண்ட்தைக் கண்ட்தும் அதிர்ச்சியானேன்.

இப்படி ஒருவர் பின் ஒருவராக  பூங்காவிலுள்ள சிறுவர்களை நெருங்கி வந்து புகைப்படம் எடுப்பதும், தொடுவதும், பார்த்ததும், இவர்கள் “சிறார் காமுகர்கள்”களாக இருப்பார்களோ என்ற அச்சம் மேலோங்கியது. 

கண்முன்னால் நிகழும் இந்த அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருக்க முடியாமல், சிறார்களுடன் நெருக்கமாகப் படம் எடுத்துக்கொண்டிருந்த அந்த ஆடவரைப் பிடித்து, அவனது நண்பர்களையும்  அழைக்குமாறு  சொன்னேன்.

அவர்கள் அனைவரும் வந்ததும், அவர்களிடம் தாங்கள் பரிமாறிக்கொண்ட புகைப்படங்களை இப்போதே அழிக்குமாறு வற்புறுத்தினேன்.. அதோடு, அவ்வாறு செய்யாவிட்டால் போலீஸை கூப்பிடுவதாகவும்,  அவர்களின் கைத்தொலைப்பேசி களைப் பிடுங்கிக ஆற்றில் எரிந்து விடப்போவதாகவும் ஶ்ரீ தரன் மிரட்டியுள்ளார். 

முகநூலில் தமக்கு  எதிர்நோக்கிய இச்சம்பவம் குறித்து பதிவு செய்த ஶ்ரீ தரன், பெற்றோர்கள், முன் பின் தெரியாதவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் படம் எடுத்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது. அவர்கள்,  அப்படங்களைக் கொண்டு, இவ்வாறான விஷமத்தனமான காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடும் என ஶ்ரீ தரன் கேட்டுக்கொண்டுள்ளார். 

 இச்சம்பவம் குறித்து ஶ்ரீ தரன் காவல்நிலையத்தில் புகார் செய்தாரா? என்பது குறித்த தகவலை அவர் குறிப்பிடவில்லை. ஆயினும்,  தமது பதிவில்   #PDRM என காவல்துறைக்கு அவர் டேக் செய்துள்ளார். 

ஜூலை 7-ஆம் தேதி  பதிவெற்றம் செய்யப்பட்டுள்ள இப்பதிவில் இதுவரை நெட்டிசன்கள் ஶ்ரீதரனின்  நடவடிக்கையைப் பாராட்டியுள்ளதோடு 7000க்கும் மேற்பட்டோர் பகிர்ந்து வருகின்றனர். 

இப்பதிவில் கருத்துரைத்த   அனிமா  கொசாய் என்பவர் "குழந்தைகளுக்காகக் குரல் கொடுத்ததற்கு நன்றி. உங்கள் நடவடிக்கை  மற்ற இளைஞர்களுக்கும்  ஓர் முன்னுதாரணமாக இருக்க  வேண்டும். அதோடு இதுபோன்ற சமூக சீர்கெடுகள் கண்டு பிடிக்கப்பட்டு, சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பொதுவாக சிறார்கள் விஷயத்தில் பெற்றோர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் விழிப்பாக இருக்க வேண்டும் இவர் நிரூபித்துள்ளார் என மற்றொரு பெண்மணி  பாராட்டியிருக்கிறார்.

 கடந்த சில மாதங்களுக்கு முன் மலேசியாவில் ரிச்சர்ட் ஹக்கல் என்ற ஆடவர் சிறார்களுடன்னான நெருக்கமான புகைப்படங்களை ஆபாச  வலைதளங்களில் வெளியிட்டு லண்டனில் 22 ஆயுள் தண்டனை பெற்றதைச் சுட்டிக்காட்டிய மற்றொரு முகநூல் பயனர், இவனைப் போன்ற மனநோயாளிகள் சமூகத்தில் உலவுவதால் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS