ஆஸ்திரேலிய ஓபன்: பைனலில் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் உலகின் "நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச்.
மெல்போர்னில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், "நடப்பு சாம்பியன்' ஜோகோவிச் , இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை எதிர்கொண்டார். இதில் 3-6, 6-7, முதல் இரண்டு செட்டை இழந்த ஜோகோவிச், பின் எழுச்சி பெற்றார். 4 மணி நேரம், 50 நிமிடங்கள் நீடித்த இப்போராட்டத்தில் ஜோகோவிச், 6-3, 3-6, 6-7, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
நாளை நடக்கும் பைனலில்ஜோகோவிச், நடால்(ஸ்பெயின்) மோதுகின்றனர்.
ரஷ்ய ஜோடி சாம்பியன்:
பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், ரஷ்யாவின் சுவனரேவா, கஸ்னட்சோவா ஜோடி, இத்தாலியின் சாரா எரானி, ராபர்டா வின்சி ஜோடியை எதிர்கொண்டது. இதில் சுவனரேவா ஜோடி, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று "சாம்பியன் பட்டம்' வென்றது. இது ஆஸ்திரேலிய ஓபனில் இந்த ஜோடி வெல்லும் முதல் பட்டம்.
சானியா ஜோடி "அவுட்' :
கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, பூபதி ஜோடி, அமெரிக்காவின் சேன்ட்ஸ், ருமேனியாவின் டிகாயு ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது.
பைனலில் பயஸ் ஜோடி:
கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் பயஸ், ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி, இத்தாலியின் வின்சி, டேனியல் ஜோடியை 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வென்று, பைனலுக்குள் நுழைந்தது.



Post your comment