ஓர் அகதியின் துயரை உங்களால் உணர முடியுமா?- (காணொளி)

World
Typography

‘எங்களை எந்த நாடு ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது?  எந்த நாட்டின் எல்லைக் கதவுகள் திறந்து இருக்கின்றன, ஒரு வேளை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டால், நம்மை என்ன செய்வார்கள்' என இவர்களுக்கு எந்த தகவல்களும் தெரிவது இல்லை.  அதனால், பல லட்சம் மக்கள் பல துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள்.

முன்பு அகதிகள், ருமேனியா, பல்கேரியா, அல்பானியாஆசிய மேற்கு பால்கன் நாடுகள் வழியை பயன்படுத்தி, ஐரோப்பியாவிற்குள் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், மார்ச் 2016ஆம் ஆண்டு இந்த பாதை மூடப்பட்டுவிட்டது. இதனால், கிரீஸில் உள்ள அகதி முகாம்களில்  தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டும் 46,000 மக்கள்.  

இந்த ஆய்வு முடிவுகளை மையமாக கொண்டு, மூன்று நிமிடப் படத்தை எடுத்து இருக்கிறது பி பி சி நிறுவனம். 

தங்கள் தேச அடையாளங்களைத் துறந்து, அகதி என்னும் புது அடையாளத்தை தழுவிக் கொள்ள இருப்பவர்கள், தங்களுடன் எடுத்துச் செல்வது ஒரு கைபேசியை மட்டும்தான்.

அப்படி கைபேசியுடன் செல்லும் ஒரு அகதி கூட்டத்தின்  கதைதான் அந்த அனிமேஷன் படம். 

கையில் கைபேசியுடன், கடலில் அகதி கூட்டம் பயணம் செய்து கொண்டிருக்கிறது. பெரும் மழை. இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நிலப்பரப்பில் இருக்கும் தந்தையுடன், ஒருவன் கைபேசியில் உரையாடி சில தகவல்களை பெறுகிறான்.

அப்போது அவனுடைய கைபேசிக்கு ஒரு தகவல் வருகிறது. 'திரும்ப வந்துவிடு, எல்லை வாயில் மூடப்பட்டுவிட்டது' என்கிறது தகவல். 'இது உண்மையா... நிச்சயமாகவா... உங்களுக்கு எப்படி தெரியும்...? ' என்று கேட்கும்போது கைபேசியில் பேட்டரி சார்ஜ் குறைகிறது. 

மூன்று நிமிடம் உங்கள் தேசங்களை மறந்து, சவுகரியங்களை மறந்து, கடலில் தத்தளிப்பவராக உங்களை நினைத்துக் கொண்டு அந்த படத்தைப் பாருங்கள்.  

உண்மையில் அவர்களுக்கு தகவல்கள் விலைமதிப்பற்றவை என்று புரியும்...!

 

BLOG COMMENTS POWERED BY DISQUS