புதிய விதிகளில் சிக்கிய கவர்ச்சி விளம்பரங்கள்: வர்த்தகர்கள் மருட்சி!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜூலை 29- அண்மையில் கிளந்தான், கோத்தாபாரு மாநகராட்சி அமல்படுத்தி இருக்கும் புதிய உத்தரவின் காரணமாக இங்குள்ள வர்த்தகர்கள் தங்களின் விளம்பரப் போர்டுகளை அவசர அவசரமாக அகற்றியுள்ளனர். வர்த்தக மையங்க ளில் இடம்பெற்றிருக்கும் கவர்ச்சியான விளம்பரங்களை அனுமதிக்க முடியாது என்று கோத்தாபாரு மாநகராட்சி அறிவித்தி ருக்கிறது.

அண்மையில் இங்கு ஒரு கடிகார விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு விளம்பரங்கள் மிகக் கவர்ச்சியாக இருப்ப தாக கூறி, சமன் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோத்தாபாரு வர்த்தக மையங்கள் இப்போது பீதி அடைந்துள்ளன.

சமன் செய்யப்பட்ட கடிகார விளம்பரங்களில் ஒன்று பிரபல போலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் தோன்றும் விளம்பரப் போர்டு ஆகும்.

தங்களின் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் வழக்கமாக விளம்பரப் போர்டுக ளையும் சப்ளை செய்வதுண்டு. ஆனால், இந்தப் புதிய விதிமுறைகளுக்குப்பிறகு அவர்கள் விளம்பர போர்டுகள் சப்ளை  செய்வதை நிறுத்தி விட்டனர். 

மேலும் பல நிறுவனங்கள் தங்களது விளம்பரப் போர்டுகளை புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மறுவடிவம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன. பல வர்த்தகர்கள் தங்களின் சொந்தப் பணத்தில் மீண்டும் மாறுபட்ட விளம்பரப் போர்டுகளை உருவாக்கு வதில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS