ஆகஸ்டு- இந்தியர் ஒற்றுமை மாதம்! (காணொளி)

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜூலை 29- ஆகஸ்டு மாதம்  இந்திய ஒற்றுமை மாதமாக ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த சுடர் ஒலி என்ற இயக்கத்தின் முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒற்றுமைக்கு பெயர் போன நாடு மலேசியா. இங்கு மிகப் பெரிய மூன்று முக்கிய இனங்களாக மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் திகழ்கிறார்கள். மேலும் ஈபான், கடசான், மூரூட் போன்ற இனங்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கொப்ப இங்கு ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். 

இந்த உயர் எண்ணத்தை பிஞ்சு மனங்களில் பதிக்கும் முயற்சியாக, ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31ஆம் தேதி மெர்டேக்கா தினம் வரை இந்தியர்களின் ஒற்றுமைக்கான மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜொகூர் மாநிலம் உட்பட நாட்டின் பல தமிழ்ப்பள்ளிகள் முன்னோடியாக இருந்து இந்தியர்களின் ஒற்றுமை மாதத்தை கொண்டாடத் தயராகியுள்ளது. பள்ளிகளில் இதற்கான பதாதைகள் இப்போது தயாராகிவிட்டன.

ஒற்றுமையை புலப்படுத்தும் வகையில் இசைப்பாடல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. இந்தப் பாடலை அறிவானந்தன் மாரிமுத்து என்ற இளைஞர் எழுதியுள்ளார். வர்மன் இளங்கோவன் இசை அமைத்திருக்கிறார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS