Home | சிறப்பு பார்வை | தீபாவளி பலவிதம்

தீபாவளி பலவிதம்

By
Font size: Decrease font Enlarge font
தீபாவளி பலவிதம்

தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடியவன், நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள். தமிழகத்தில் சோழர் காலம் வரை தீபாவளி கொண்டாடப் படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது!

 

வனவாசம் முடிந்து ஶ்ரீராமன் அயோத்திக்குத் திரும்பிய திருநாளை, தீபங்கள் ஏற்றி வைத்துக் கோலாகலமாகக் கொண்டாடினர் அயோத்தி மக்கள். அந்தத் திருநாகளே தீபாவளி என்கின்றனர் வடநாட்டவர்.

 

ஶ்ரீதேவி மற்றும்  மூதேவி ஆகியோர் பாற்கடலில் தோன்றியதும் அவர்களை முறையே மகாவிஷ்ணுவும், உத்தாலக முனிவரும் மணந்தது தீபாவளியில் என்பர்.

 

வாமன அவதாரம் எடுத்து வந்த மகாவிஷ்ணு, மகா பலியிடம் மூன்றடி நிலம் தானம் பெற்று… மூவுலகையும் அளந்து…அவனது கர்வத்தை அடக்கிய திருநாள் தீபாவளி என்றும் சொல்வர்.

 

காஷ்மீர் மக்கள் தீபாவளியன்று ‘கோ பூஜை’ செய்கின்றனர். குஜராத் மாநிலத்தில் புதுக் கணக்கு துவங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று சிறுவர்கள் பட்டம் பறக்க விட்டு மகிழ்வர். தீபாவளி திருநாளிலேயே ஆதிசங்கரர் தனது ஞான பீடத்தை ஏற்படுத்தினாராம்.

 

புத்த பிரான் முக்தி அடைந்த நாளாக பெளத்தர்களும், மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்களும் தீபாவளி திருநாளை அனுஷ்டிக்கிறார்கள்

Subscribe to comments feed Comments (0 posted)

total: | displaying:

Post your comment

Please enter the code you see in the image:

Captcha
  • Email to a friend Email to a friend
  • Print version Print version
  • Plain text Plain text

Tagged as:

No tags for this article

Rate this article

0