எலிசபெத் அரசியாரின் ஆடைகளின் கண்காட்சி!

World
Typography

பிரிட்டன், ஆகஸ்டு 6- எலிசபத் அரசியாரின் ஆடைகள் இங்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அரிசியாரின் 90-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த கண்காட்சியும் நடக்கவிருக்கிறது.

அரசியின் ஞானஸ்தானம், முடி சூட்டும் விழா, அண்மைய அரசு குடும்ப திருமணங்கள் போன்றவை உட்பட ஒவ்வொரு நிகழ்விலும் எலிசபெத் அரசியார் அணிந்திருந்த உடைகளை ஒன்றாக ஒரே இடத்தில் பார்ப்பதற்கான வாய்ப்பு இதுவாகும்.

மேலும், எலிசபெத் அரசியாரின் பலவகையான அதிகமான தொப்பிகள் மற்றும் அவர் ‘பிரிட்டிஷ்’ இராணுவத்தின் தலைவியாக இருந்ததற்கான கெளரவ இராணுவ ஆடைகள் இங்கு வைக்கப்பட உள்ளன.

இந்தக் கோடையில் இதைப் பார்வையிடுவதற்காக 5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கண்காட்சி முற்றிலும் எலிசபெத் அரசியாரின் ஆடைகளைத் தொடர்பானதுதான் என்றாலும் ஒவ்வோர் ஆடையும் ஆயிரம் வார்த்தைகளைப் பேசும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS