'தனிக்கட்சியா? சொந்த சவக்குழியை  தாங்களே தோண்டும் வேலை!' -ஸாஹிட்

அரசியல்
Typography

பகான் டத்தோ, ஆக. 6- தனிக்கட்சி ஆரம்பிப்பவர்கள் சொந்தமாக தங்களின் சவக் குழியை தாங்களே தோண்டிக் கொள்கிறார்கள் என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி சுட்டிக்காட்டினார். இந்தத் தலைவர்களின் அரசியல் நீண்ட நாளைக்கு நீடிக்காது என்று அவர் சொன்னார்.

தனிநபருடன் உங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்காக நீங்கள் ஒரு கட்சியை அமைப்பத்து என்பது உங்களின் சுய திருப்திக்காகத்தான். ஆனால் இவ்வாறு செய்வது உங்களின் குழியை நீங்களே தோண்டிக் கொள்வதற்குச் சமம் என்றார் அவர்.

ஏமாற்றத்திற்கு உள்ளானவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியை அமைக்கிறார்கள். ஆனால் அம்னோ அப்படிப்பட்ட ஏமாற்றத்தின் பேரில் அமைக்கப்பட்ட கட்சி அல்ல என்று ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

ஐக்கியம் ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்டது தான் அம்னோ. எங்களுக்குள் பிரச்சனை எழுமானால், அவற்றை எங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொண்டு அடுத்த பணிகளை நோக்கிச் செல்கிறோம். அதனால் தான் அம்னோ பலமாக இருக்கிறது. பிரிந்து போய் அமைக்கப்பட்ட பல கட்சிகள் வந்து போய் விட்டன என்றார் அவர்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS