"ஒப்ஸ் சந்தாஸ்" நடவடிக்கை: 39 பேர் கைது நடவடிக்கை

சமூகம்
Typography

கோலாலம்பூர்,  9 ஆகஸ்டு -   நாட்டில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் போது போலீசார் 39 பேரைக் கைது செய்துள்ளனர். இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது முதல் போலீசார் 1458 பேர் மீது சோதனை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் பெண்கள் என  மாநகர துணை கமிஷனர் டத்தோ அப்துல் ஹமிட் முகமது அலி தெரிவித்தார். 

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக காயம் விளைவிப்பது,  திருட்டு, மற்றும்   ஆயுதமேந்திர கொள்ளை நடவடிக்கைகளும் அடங்கும் என அவர் ஓர் அறிக்கை வழி தெரிவித்தார். 

"ஒப்ஸ் சந்தாஸ்" நடவடிக்கையின் பெரும்பகுதி,   கேளிக்கை மையங்களிலும்,  கார் நிறுத்துமிடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS