தென்கிழக்காசிய கரடி விற்பனை:இருவர் கைது

சமூகம்
Typography

கோத்தகினபாலு, 9 ஆகஸ்டு-  பாதுகாக்கப்பட்ட  தெற்கிழக்காசிய மலாயா கரடிகளின் உடல் பாகங்களைக்  விற்க முயன்றதற்காக இரு ஆடவர்களைப் போலீசார் கைது செய்தனர்.  சபாவின் புறநகர் பகுதியைச் சேர்ந்த  30 வயது மதிக்கத்தக்க அந்த இருவரும்   அந்த கரடிகளின் உடல்பாகங்களை விற்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சபா,  வனவிலங்கு இலாகாவின் அதிகாரியான வில்லியம் பாயா தெரிவித்தார்.  

வனவிலங்கு  அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, 8  கரடிகளின் கால் பாதங்களும்,2  சீறுநீர்ப்பைகள்,  மற்றும் 8 பற்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.  

எனினும், அந்த  கரடிகளின் உடல் பாகங்கள் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டன என்பது குறித்து அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.    இதனையடுத்து, பெனாம்பாங்கைச் சேர்ந்த  மாவட்ட போலீஸ்  தலைமையகத்தில் அவ்விருவரும்  தடுத்து வைக்கப்பட்டனர்.   

1997-ஆம் ஆண்டு சபா வனவிலங்கு சட்டத்தின் படி,  மலாயன் கரடிகள் பாதுகாக்கப்பட்ட விலங்கினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS