விபசாரத்தில் 19 வயது பெண்கள்; மலாக்கா பட்ஜெட் விடுதிகளில் அவலம்

சமூகம்
Typography

மலாக்கா, செப்.3- இங்குள்ள மலிவு விலை விடுதிகளில் விபசாரத்திற்கு 19 வயது பெண்கள் ஈடுப்படுத்தப்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மலேசியர்களும் அடங்குவர் என்பது வருத்தற்குரிய விசயம் என போலீசார் கூறினர்.

மாறுவேடத்தில் வாடிக்கையாளர்கள் போல் இணையம் வழி 'சாட்' செய்த போலீஸ்காரர்கள், இந்த சட்டவிரோத செயலைக் கண்டுப்பிடித்தனர். இந்த விபசார நடவடிக்கைகளுக்கு இரு சகோதர்கள் ஈடுப்பட்டு வந்ததும் அவர்கள் மூலமே உள்ளூர் பெண்கள் இதில் ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இணையம் வழி மட்டுமே நடத்தப்பட்டு வரும் இந்த விபசார நடவடிக்கையில், மலேசிய பெண்களிடம் உறவு கொள்ள ஒருமுறைக்கு ரிம250 முதல் ரிம300 வரையிலும், வெளிநாட்டு பெண்களுக்கு ரிம165 முதல் ரிம200 வரையிலும் பணம் பெறப்படுவதாக போலீசார் கூறினர். 

போலீசின் திடீர் பரிசோதனையில் சிக்கி கொள்ளாமல் இருக்க, இணையம் வழி இவ்வகை தொழில் தற்போது நடத்தப்பட்டு வருவதாக கூறிய போலீசார், கல்லூரி பெண்களே இதில் அதிகம் ஈடுப்படுவதாக கூறினர்.

இவர்கள் கூடுதல் பணம் சம்பாத்திக்க இவ்வாறு செய்கிறார்களா அல்லது வற்புறுத்தலின் படி இத்தொழில் நடைபெறுகிறதா என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் மேலும் கூறினர்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS