பயனாளிகள் பற்றிய இரகசியங்கள்: பேஸ்புக் பதிவு செய்கிறதா?

Science
Typography

நியூயார்க் அக்.30- சமூக ஊடகங்களில் பிரபலமாக இருந்து வரும் பேஸ்புக் தொடர்பில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பேஸ்புக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் குரல்வழி அழைப்புக்கள் அனைத்தும் இரகசியமாகப் பதிவு செய்யப்படுவதாக அந்தத் தகவல் கூறுகிறது.

அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவல் உறுதிப்படுத்தப் படவில்லை. எனினும் பிபிசி இணையத்தளத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பல மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சமூக வலைத்தளம் ஏற்கனவே தனிநபர் தகவல்களை பல்வேறு வகைகளில் பகிர்ந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.. பேஸ்புக் நிறுவனத்திற்கு அவமதிப்பினை ஏற்படுத்துவதற்காகவும் இந்தத் தகவலை பரப்பியிருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS