நிலாவில் வேற்றுக் கிரக வாசிகளின் பயணக் கலமா? வீடியோ சர்ச்சை

Science
Typography

லண்டன், ஜன.13- யார் என்ன சொன்னாலும் சரி, அது வேற்றுக் கிரகவாசிகளின் பயணக் கலம் தான் என்று யுஎப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகள் மீது நம்பிக்கை வைத்துச் செயலல்பட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அண்மையில் யூ-டியூப்பில் வெளியாகி  "நிலா மேற்பரப்பில், வேற்றுக் கிரகவாசிகளின் கலம்" (Alien Ship on the Lunar Surface) என்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து  பல மாதிரியான கருத்துகள் சமூக ஊடகங்களிலும் அறிவியல் அரங்கிலும் நிலவி வருகின்றன.  நிலாவில் வேற்றுக்கிரக பயணக் கலம் என்பது இட்டுக்கட்டிய விஷயம் என்று பலர் விமர்சித்துள்ளனர்.

எனினும், இதனை மறுத்துள்ள யுஎப்ஓ ஆதரவு இயக்கமான ஸ்த்ரீட் கேப், இந்த வீடியோ,  சீனாவின் சாங்'ஜி-3 என்ற நிலா விண் ஊர்தியினால் எடுக்கப்பட்ட ஒன்று எனக் கூறியுள்ளது. இந்த விண் ஊர்தியை சீனா கடந்த 2013 ஆம் ஆண்டில் நிலாவுக்கு அனுப்பியது.

இந்த விஷயத்தை நாம் சாதாரணமாக அலட்சியப்படுத்தி விடக்கூடாது. கண்டறிவதற்கு போதுமான அடிப்படையைக் கொண்ட ஓர் அம்சம் இது என்று அந்த இயக்கம்  வர்ணித்தது. 

யூ-டியூப்பில் வெளியான இந்த வீடியோவை பல ஆயிரம் பேர் பார்த்து வருகின்றானர். இவர்கள் வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய சிந்தனையை நிராகரித்து விடக்கூடாது என்று அது தெரிவித்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS