சான்பிரான்சிஸ்கோ, செப்.13- முதல் 'ஐ-போன்' வெளிவந்த கடந்த 10ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் 'ஐ-போன் 10' புதிய மாடல், தொழில்நுட்ப உலகின் புதிய திருப்பு முனையாக அமைகிறது என வர்ணிக்கப்பட்டது. 

ஆப்பிள் நிறுவனம் இம்முறை மூன்று வகையான ஐ-போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. 'ஐ-போன் 8', 'ஐ-போன் 8 பிளஸ்' மற்றும் பிரிமியம் 'ஐ-போன் 10' ஆகியவையே அந்த மூன்று புதிய வரவுகள் ஆகும்.

"முதல் ஐ-போன் வெளிவந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இதோ, இப்போது, இந்த இடத்தில், அறிமுகமாகும் ஐ-போன் 10 என்பது, அடுத்த 10 ஆண்டுகளுக்கான புதிய தொழிநுட்ப மாற்றங்களின் ராஜ பாதையாக அமையப் போகிறது" என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் கூக் அறிவித்தார்.

ஆப்பிள் நிறுவனத்தின் இன்னொரு மைல் கல் இந்த 'ஐ-போன் 10' எனலாம். கைத் தொலைபேசித் தொழில் நுட்பத்தில் "மாபெரும் அதிவேக முன் பாய்ச்சல் இது" என்று அவர் வர்ணித்தார். 

இந்த ஐ-போன் 10-இல், திரை என்பது போனின் கடைசி விளிம்பு வரையில் விரிந்திருக்கும். போனை செயல்பட வைக்கும் திறவுகோல் எது தெரியுமா? உங்கள் முகம்தான். முகத்தின் அடையாளம் கண்டு, உங்கள் போன் உங்களுக்காக திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், அதன் கேமிராவில் 'சூப்பர் விழிப் படலம்' உள்ளது. மிகத் துல்லியமானதாக இருக்கும். இந்த ஐ-போன் 10-இல் இரண்டு வகை அறிமுகமாகிறது. முதலாவது வகையின் விலை 999 அமெரிக்க டாலர். இரண்டாவது வகை 1,149 அமெரிக்க டாலர்.

அதேபோன்று ஐ-போன் 8 மற்றும் 8 பிளஸ் ஆகியவை கண்ணாடி உடலமைப்பைக் கொண்டவையாக  இவை விளங்குகின்றன. 

 

 

சான் பிரான்ஸ்சிக்கோ, ஆக.10- தொலைக்காட்சி சந்தையுடன் போட்டியிடும் வகையில் ‘பேஸ்புக்’ நிறுவனம் புதிய வீடியோ ஒளிப்பரப்பும் சேவை ஒன்றை புதன்கிழமையன்று அறிமுகம் செய்துள்ளது. 

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்படுவது போன்று முகநூலிலும் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப் படவிருக்கின்றன. இனிமேல், அமெரிக்காவின் தேசிய மகளிர் கூடைப்பந்து போட்டி, நேஷனல் ஜியோ கிராபிக்ஸ்சின் சாஃபாரி நிகழ்ச்சி மற்றும் டைம்ஸ் நிறுவனத்தின் பெற்றோரியல் நிகழ்ச்சி ஆகியவற்றை முகநூல் வழி  மக்கள் கண்டுக் களிக்கலாம்.

இந்த மறுவடிவமைக்கப்பட்ட வீடியோ சேவை ‘வாட்ச்’ என்ற பெயரில் அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் காண்கிறது. இந்தச் சேவையை முகநூல் செயலி, இணைய அகப்பக்கம் மற்றும் தொலைக்காட்சி செயலி மூலம் மக்கள் பெறலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது.

கடந்தாண்டு பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்த வீடியோ சேவையில் அசல் மற்றும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட வீடியோக்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக, முகநூல் பயனர்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த மே மாதம் வோக்ஸ் மீடியா, பஸ்பீட், ஏடிடிஎன், நைன் மீடியா ஆகிய பொழுதுபோக்கு அம்சம் கொண்ட நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களோடு பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அது மட்டுமல்லாமல், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை இந்த புதிய வீடியோ சேவையின் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியது.

'வீடியோ கேம்'களுக்கு என்று உலகில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இன்று அதிநவீன கைப்பேசியால் பலர் மாய விளையாட்டில் மூழ்கினாலும், அன்று தொலைக்காட்சி தொடங்கி கணினி வரை வீடியோ கேம் விளையாடியதை யாராலும் மறுக்க முடியாது.

வீடியோ விளையாட்டுகள் தொடங்கியது என்னவோ 1947ஆம் ஆண்டில் தான். ஆனால் அது பிரபலமானது உலகளவில் தொலைக்காட்சிகள் பயன்படுத்தப்பட்ட 60ஆம் ஆண்டுகளில் தான். தொடக்கத்தில் கோடு வடிவில் விளையாட்டுகள் தொடங்கிய நிலையில் 90ஆம் ஆண்டுகளில் மனித மற்றும் மிருகங்களின் வடிவங்கள் அசலைப்போலவே உருவாக்கப்பட்டன. 

இருப்பினும் கார்ட்டூன் வடிவிலான விளையாட்டுகளான மாரியோ, ஸ்நேக் கேம் போன்ற விளையாட்டுகள் அதிக புகழ் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் கால ஓட்டத்தில் குறிப்பாக 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வீடியோ விளையாட்டுகளின் வளர்ச்சி அசூரத்தனமானது. இன்றைய இளையோர் பலர் அக்கால வீடியோ கேம்களைப் பார்த்திருப்பார்களா? கேள்வி பட்டிருப்பார்களா என்றால் இல்லை என்றே தைரியமாக கூற முடியும் இவர்களுக்காகவே காணொளி வடிவில் ஒட்டு மொத்த வீடியோ கேம்களையும் ஒன்றாக இணைத்துள்ளனர்.

மனிதன் எங்கிருந்து தோன்றினான் என்று யாராவது கேட்டால், புத்திசாலி எங்கே என்று யோசிப்பான், அதிபுத்திசாலியோ சட்டென்று அம்மாவின் வயிற்றில் என்பான். நமக்கு தெரிந்த விசயத்தை தானே நாம் கூறுவோம்.

'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்று சொல்லியே பழக்கப்பட்ட நாம், உண்மையில் எங்கு தான் மனித இனம் தோன்றியது என்பதைப் பார்ப்போம்.மனித இனம் முதலில் தோன்றியது ஆப்ரிக்காவில் அல்ல, ஐரோப்பாவில் தான் என்று ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதனின் மூதாதையர்களான ஏப்ஸ் வகை குரங்குகள் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி வருகின்றனர். இந்த நிலையில் மனித இனம் முதலில் தோன்றியது ஐரோப்பாவில்தான் என ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஜெர்மனியைச் சேர்ந்த டுபிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானி மாடேலைன் போமே தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்கேரியன் அறிவியல் அகாடமியை சேர்ந்த நிகோலாய் ஸ்பேஷவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 

இவர்கள் ஐரோப்பா கண்டத்தில் உள்ள கிரீஸ் நாட்டில் கிடைத்த மனிதனின் மூதாதையர்களான ஹோமினிட்களின் கீழ்தாடை, பல்கேரியாவில் கிடைத்த அந்த இனத்தின் கடைவாய்ப்பல் படிமங்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ததில் இந்த முடிவு கிடைத்துள்ளது. இதன்படி மனித இனம் தோன்றியது ஐரோப்பா கண்டத்தில் தான் என்று அவர்கள் கூறுகின்றனர். 

இவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த மனித மூதாதையர்களை விட 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஆராய்ச்சி தொடர்பாக அந்த குழுவின் தலைவர் போமே கூறுகையில், `‘இந்த படிமங்கள் 70 லட்சம் ஆண்டுக்கு முந்தையது. சிம்பன்சியும் மனிதனும் என 2 ஆக பிரிந்தது கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் தான். ஆப்ரிக்காவில் அல்ல’’ என்றார்.

More Articles ...