‘பேஸ் புக்கில்' புதிய வடிவம் பெற்றது வீடியோவை ஒளிப்பரப்பும் சேவை!’

தொழில்நுட்பம்
Typography

சான் பிரான்ஸ்சிக்கோ, ஆக.10- தொலைக்காட்சி சந்தையுடன் போட்டியிடும் வகையில் ‘பேஸ்புக்’ நிறுவனம் புதிய வீடியோ ஒளிப்பரப்பும் சேவை ஒன்றை புதன்கிழமையன்று அறிமுகம் செய்துள்ளது. 

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்படுவது போன்று முகநூலிலும் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப் படவிருக்கின்றன. இனிமேல், அமெரிக்காவின் தேசிய மகளிர் கூடைப்பந்து போட்டி, நேஷனல் ஜியோ கிராபிக்ஸ்சின் சாஃபாரி நிகழ்ச்சி மற்றும் டைம்ஸ் நிறுவனத்தின் பெற்றோரியல் நிகழ்ச்சி ஆகியவற்றை முகநூல் வழி  மக்கள் கண்டுக் களிக்கலாம்.

இந்த மறுவடிவமைக்கப்பட்ட வீடியோ சேவை ‘வாட்ச்’ என்ற பெயரில் அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் காண்கிறது. இந்தச் சேவையை முகநூல் செயலி, இணைய அகப்பக்கம் மற்றும் தொலைக்காட்சி செயலி மூலம் மக்கள் பெறலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது.

கடந்தாண்டு பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்த வீடியோ சேவையில் அசல் மற்றும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட வீடியோக்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக, முகநூல் பயனர்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த மே மாதம் வோக்ஸ் மீடியா, பஸ்பீட், ஏடிடிஎன், நைன் மீடியா ஆகிய பொழுதுபோக்கு அம்சம் கொண்ட நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களோடு பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அது மட்டுமல்லாமல், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை இந்த புதிய வீடியோ சேவையின் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியது.

BLOG COMMENTS POWERED BY DISQUS