11 மொழி பேசும் செயற்கை நுண்ணறிவு  ரோபோ! பெங்களூரில் வடிவமைப்பு! 

தொழில்நுட்பம்
Typography

 பெங்களூர், அக்.24- இந்திய மக்களின் வசதிக்காக இந்திய மொழிகளை பேசும் ஆர்ட்டிபிசியல் இண்டலிஜெண்ட்ஸ் ரோபோட் (artificial intelligence robot) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ரோபோ பெங்களூரில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் இருக்கும் மிகச் சிறிய தொழில் முனைவோர் நிறுவனம் இதனைக் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் யார் வேண்டுமானாலும் இந்தியாவில் உள்ள அனைவரிடமும் எளிதாக பேசமுடியும் எனக் கூறப்பட்டது. நாம் பேசும் மொழியை புரிந்து கொண்டு இது மற்றவருக்கு மொழிபெயர்க்கும். 

பெங்களூரில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'லிவ். ஏ.ஐ' என்ற நிறுவனம் இந்த ரோபோவை உருவக்கி உள்ளது.. இது 11 மொழிகளை பேசும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சுயமாக எந்திரமே சிந்திக்கும் திறனைத் தரும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வைத்து நிறைய வித்திசமான செயல்களை செய்ய முடியும். 

ஆப்பிள் போனில் இருக்கும் 'சிறி' மென்பொருள், விண்டோசில் இருக்கும் 'கார்டோனா' மென்பொருள் ஆகியவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதுதான். 

இந்தத் தொழில்நுட்பத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் சோதித்து வருகின்றது. இதில் நிறைய ஆய்வுகள் நடத்தி புதிய புதிய கண்டுபிடிப்புகளை இதை கொண்டு நிகழ்த்தி வருகின்றது. 

உலகின் பல நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும் இந்தியாவில் மட்டும் அதிக அளவில் இதில் யாரும் ஆராய்ச்சி நிகழ்த்தவில்லை. இந்நிலையில் இந்த தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக 'லிவ். ஏ.ஐ' என்ற நிறுவனம் பெங்களூரில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வந்தது. உலகில் உள்ள பெரிய நிறுவனங்கள் இதை எப்படி பயன்படுத்துகிறது என்ற ஆராய்ச்சி நடத்தியது.

தற்போது இந்தியாவில் இருக்கும் மொழிப்பிரச்சனையை தீர்ப்பதற்காக இந்த நிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்தியாவின் 11 முக்கிய மொழிகளைப் பேசும் வகையில்  ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது. 

இந்த தொழில்நுட்பம் கூகுளை விட மிகவும் எளிமையானது என கூறப்பட்டுள்ளது. அதன்படி நாம் பேசும் மொழியை அதுவே கண்டுபிடித்து நாம் விரும்பிய மொழியில் மாற்றி கொடுக்கும். மிகவும் துல்லியமான முறையில் இந்த தொழிநுட்பம் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS