சியோல், ஜன.23- 'கேலக்ஸி நோட் 7' (Galaxy Note 7) கைத்தொலைபேசி அதிகமாக சூடேறி, எரிந்துப் போனதற்கான காரணத்தைக் கண்டறியும் சாரணையின் முடிவில் அது பேட்டரிகளினால் ஏற்பட்ட விபரீதமே தவிர வேறு கோளாறுகள் எதுவும் இல்லை என்று சம்சோங் நிறுவனம் அறிவித்தி ருக்கிறது.

இந்தக் கோளாறுக்கு மென்பொருளோ அல்லது வன்பொருளோ காரணமல்ல, முற்றிலும் பேட்டரிதான் காரணம் என்று சம்சோங் கூறியது. கடந்த அக்டோபர் மாதத்திலேயே கேலக்ஸி நோட் 7 கைதொலைப்பேசியை சம்சோங் மீட்டுக்கொண்டது. இதனால், சம்சோங் கிட்டத்தட்ட 530 கோடி டாலர் இழப்பை எதிர்நோக்கியது.

பேட்டரிகள் தீப்பிடிப்பது தொடர்பில் சுதந்திரமான ஒரு உள்விசாரணைக் குழுவை சம்சோங் அமைத்து முழுமையான ஆய்வை மேற்கொண்டது. அந்த பேட்டரியின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு ஆகிய இரு நிலைகளிலும் கோளாறுகள் இருப்பதாக அது தெரிவித்தது.

கைத்தொலைபேசிக்குள் அடங்காத வகையில் சற்று பருமனாக பேட்டரி வடிவமைக்கப்பட்டது மற்றும் மின் பாயாமல் காக்கும் பொருள் போதுமான அளவில் பேட்டரிக்குள் இல்லாமல் போனது ஆகியவைதான் அது சூடேறி தீப்பிடிக்க காரணமாக அமைந்து விட்டது என்று விசாரணைக் குழு விளக்கியது.

 பேட்டரி தீப்பிடிக்கும் பிரச்சனை தொடர்பில் கிட்டத்தட்ட 25 லட்சம் கேலக்ஸி நோட் 7 கைத்தொலை பேசிகளை அந்நிறுவனம் சந்தையில் இருந்து மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு மாற்றாக வெளிடப்பட்ட பேட்டரியில் அத்தகைய பிரச்சனை எதுவும் இல்லை என்றும் இந்தத் தவறுக்கான எல்லா பொறுப்புக்களையும் சம்சோங் நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது. 

 

 

 

பெங்களூர், ஜனவரி 10- யாஹூ நிறுவனம் மிகப் பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. இப்போது யாஹூவின் புதிய பெயர் என்ன தெரியுமா?  அல்டாபா.  அதோடு  அதன் தலைமைச் செயல் முறை அதிகாரியையும் யாஹூ நிறுவனம் அதிரடியாக மாற்றியுள்ளது. 

ஜீமெயிலுக்குப் போட்டியாக மின்னஞ்சல் சேவைகளை வழங்கி வந்த  யாஹூ, டிஜிட்டல் விளம்பரம், மீடியா சொத்துக்கள் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தது. 

 பின்னர், வெரிசோன் நிறுவனத்திற்கு 4.83 பில்லியன் டாலருக்கு யாஹூ அதன் முக்கிய வர்த்தகமான இமெயில், விளம்பரம் மற்றும் மீடியா சொத்துக்களை விற்பனை செய்தது.   

இந்நிலையில், கடந்த ஆண்டு டேட்டா திருட்டு நிகழ்ந்துவிட்டதாக யாஹூ தெரிவித்தது. அதன் படி சுமார் 500 மில்லியன் மக்களின் இமெயில் கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாகவும், இன்னொரு முறை ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும் யாஹூ தெரிவித்தது. 

ஆனால், வெரிசோன் அதிகாரிகளோ யாஹூ மீது நம்பிக்கை உள்ளதாகக் கூறி, இந்த பிரச்சனை குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.  

இந்நிலையில், வெரிசோனுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, யாஹூ நிறுவனம் இனி அல்டாபா என அழைக்கப்படும். இதுவரை அதன் தலைமை செயல்முறை அதிகாரியாக இருந்து வந்த மரிஸா மேயர் பதவி விலகவுள்ளார்.மேலும் ஐந்து இயக்குனர்கள் பதவி விலகவுள்ளனர். மற்ற இயக்குனர்கள் அல்டாபா  நிறுவனத்தை மேற்பார்வை செய்வார்கள் .

லாஸ்ஏஞ்சலிஸ், டிசம்,30- செயற்கை அறிவு 'ரோபா'க்களினால் வெகு விரைவில் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏஎல் (Al) என்றழைக்கப்படும் செயற்கைத் அறிவுத் திறன் கொண்ட ரோபோ தொழில்நுட்பம், மிகவேகமாக வளர்ந்திருக்கிறது. இந்த ரோபோக்க ளினால் அமெரிக்கர்கள் வேலை வாய்ப்புக்களை இழப்பர்.

குறிப்பாக, குறைந்த கல்வித் தகுதியைக் கொண்டவர்களின் வாழ்க்கையில் ஏஎல் ரோபோக்கள் மிகப்பெரிய சங்கடங்களைக் கொண்டு வரும் என்று வெள்ளை மாளிகையின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த 'ரோபோக்கள் பணியில் அமர்த்தப்படுவதால் உற்பத்தி அதிகரிக்கும். வேலை நேரம் குறையும். ஏழை, பணக்காரர்களுக்கு இடையேயான ஏற்றதாழ்வுகள் மிகவும் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

இந்த ரோபோ தொழில்நுட்பத்தினால் ஏற்படவிருக்கும் வேலைவாய்ப்பு இழப்பு, ஏழை-பணக்காரர் என்ற ஏற்றதாழ்வு போன்ற பாதிப்புகள் நீண்ட காலம் நீடிக்குமா? என்று கேட்டால், அது அந்தத் தொழில்நுட்பம் மற்றும் அதனைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்களையும் பொறுத்தது என்ற வெள்ளை மாளிகையின் ஆய்வுத் தெரிவித்தது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6 விழுக்காடு வேலை வாய்ப்புக்களை இந்தச் செயற்கை அறிவுத்திறன் ரோபோக்கள் ஆக்கிரமித்து விடும் என்று அந்த அறிக்கை விளக்கியது.

 

 

 

சான் பிரான்சிஸ்கோ, நவம்பர் 5- சமூகவலைதளமான பேஸ்புக்கைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மில்லியன் கணக்கில் அதிகரித்து வருகிறது. உலகில் ஒரு சமுதாயமே உருவாகிக் கொண்டிருக்கிறது என்றால் அது ஆன்லைன் சமுதாயம் தான் எனக் கூறும் அளவுக்கு இன்று இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு சமூக வலைதளங்களின் அதிகரிப்பும் ஒரு காரணம் எனலாம். அந்த வகையில், உலகம் முழுவதும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பு நிலவரப்படி, உலகம் முழுவதும் 1.79 பில்லியன் மக்கள் குறைந்த பட்சம், மாதத்திற்கு ஒரு முறையாவது முகநூல் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இதில் விவேக கைப்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக, உலகம் முழுவதும் 1.66 பில்லியன் மக்கள், விவேக கைப்பேசி வழி பேஸ்புக் செயலியை குறைந்தபட்சம் மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர்.

இவர்களில் 1.09 பில்லியன் பேர் தினம் செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். இதனிடையே பேஸ்புக் அண்மையில் அறிமுகப்படுத்திய பேஸ்புக் லைப் வீடியோக்களை காணும் மக்களின் எண்ணிக்கையும் 3 மடங்காக அதிகரித்துள்ளதாக மார்க் சுக்கர்பர்க் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இன்ஸ்கிராமிலும் 100 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். அடுத்து பேஸ்புக் நிறுவனம் 3டி வழி அதன் சேவையைப் பன்மடங்காக அதிகரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

More Articles ...