புதுடில்லி, அக்.31- விண்வெளிக்கு செயற்கைத் துணைக் கோளம் அனுப்பும் திட்டத்தில் புதிய சாதனைப் படைக்க, இந்தியா தயாராகி வருகிறது. 2017ஆம் ஆண்டில் ஒருசேர 83 துணைக்கோளங்களை விண்வெளிக்கு பாய்ச்சத் திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளிக் கழகமான இஸ்ரோ, புதிய உலகச் சாதனையை ஏற்படுத்தும் முற்சியில் இறங்கியுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரே ராக்கெட்டின் வழி 83 துணைக் கோளங்களைப் பாய்ச்சும் திட்டத்தில் அது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தத் துணைக் கோளங்களில் இரண்டு துணைக் கோளங்கள் இந்தியாவுக்கு உரியதாகும். எஞ்சிய 81 துணைக் கோளங்கள் வெளிநாடுகளுக்குச் சொந்தமானதாகும். 

துணைக் கோளங்களை விண்வெளிக்கு அனுப்பும் தொழிலில் ஆர்வம் காட்டிவரும் இந்தியா, தற்போது 500 கோடி ரூபாய்க்கான ஆர்டர்களைப் பெற்றிருக்கிறது. மேலும் 500 கோடி ரூபாய் ஆர்டர்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த சாதனை முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் கடுமையான சவாலை எதிர்நோக்கியுள்ளனர். இந்த 83 துணைக் கோளங்களையும் விண்வேளியில் முறையாக விடுவிக்கும் வரையில், தங்களின் ராக்கெட் பூமியின் ஒரே மாதிரியான சுற்றுப் பாதையில் வலம் வரும் வண்ணம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்பதே விஞ்ஞானிகள் எதிர்நோக்கிவரும் சவாலாகும். 

 

 

 

லாஸ் ஏஞ்சலிஸ், அக்.12-  இரண்டு கைகளையும் விட்டுவிட்டு, நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினி பாணியில் முன் தலையை முடியை ஒருகையால் இழுத்துக் கொண்டே 'ஹய்யாக' ஓட்டினாலும் ஆளைக் கவிழ்க்காத மோட்டார் சைக்கிள் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. 

சொந்தமாகவே தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டு, அழகாக முன்னேறிப் பாய்ந்து செல்லும் அதிநவீன மோட்டார் சைக்கி ளை பி.எம்.டபள்யூ. நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போதைக்கு இதுதான் உலகிலேயே மிக மிகப் பாதுகாப்பான ஒரு மோட்டார் சைக்கிள் எனலாம். 

ஜெர்மனியின் பி.எம்.டபள்யூ.  தனது நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 100 ஆண்டு தொலை நோக்குப் பார்வை கொண்ட இந்த மோட்டார் சைக்கிளை வடிவமைத்திருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளுக்கு 'புகை' விடும் பழக்கம் கொஞ்சம் கூடக் கிடைக்காது.

இந்த மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தில் முற்றாக நிறுத்தி விட்டாலும் அது அப்படியே செங்குத்தாக சாயாமல் இருக்கும் அளவுக்கு சுயமாக சமநிலைப்படுத்திக் கொள்ளும் தன்மையைக் கொண்டது.

இன்னும் சொல்லப் போனால் தலையில் ஹெல்மெட்டே இல்லாமல் கூட ஓடலாம். எந்த சூழ்நிலையிலும் ஓட்டுபவரைப் பாது காக்கும் வகையில் சுயமாக 'பேலன்ஸிங்' செய்து கொள்ளும் ஆற்றல் இதற்கு உண்டு என்று பி.எம்.டபள்யூ. நிறுவனம் பெருமைப்ப ட்டுக் கொள்கிறது.

 

 

பெய்ஜிங், செப்.17- விண்வெளி ஆய்வில் அதிவேக வளர்ச்சி கண்டுவரும் சீனா, நேற்று வெற்றிகரமாக தனது இரண்டாவது ஆய்வுக்கூடத்தை விண்வெளியில் நிலை நிறுத்தியது. தியான்கோங் -2 என்ற அந்த விண்வெளி ஆய்வுக் கூடத்தை மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் விண்வெளியில் பாய்ச்சியது.

ஜியுகுவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்வெளி ஆய்வுக் கூடம், பூமியில் இருந்து 393 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.

ஏற்கெனவே சீனா தனது முதலாவது விண்வெளி ஆய்வுக் கூடத்தை 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விண்வெளியில் பாய்ச்சியது. கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த விண்வெளி ஆய்வுக் கூடத்தில் சீன விண்வெளி வீரர்கள் 8 நாள்கள் தங்கி இருந்து விட்டு பூமிக்குத் திரும்பினர். அதே போன்று 2013ஆம் ஆண்டிலும் சீன விண்வெளி வீரர்கள் இந்த ஆய்வுக்கூடத்தில் தங்கியிருந்து திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வுக்கூடத்தின் ஆயுள்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது விட்டது. செயலிழந்த அந்த ஆய்வுக் கூடம், இவ்வாண்டின் பிற்பகுதியில் பூமியில் வந்து விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்று வெற்றிகரமாக விண்வெளியில் பாய்ச்சப்பட்ட தியான்கோங்-2  விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கு எதிர்வரும் அக்டோபரில், இரு விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அவர்கள் தியான்கோங்-2 ஆய்வு கூடத்தில் 30 நாள்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

சீன விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்றுவிட்டு பூமிக்கு பத்திரமாக திரும்பவதற்கு வசதியாக, புதிய விண்கலத்தை சீனா ஏற்கெனவே தயார் நிலையில் வைத்துள்ளது. ‘மார்ச்-7’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலம் கடந்த ஜூனில் ஆள் இல்லாமல் விண்வெளி சென்றுவிட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. 

அதில்தான் சீன விண்வெளி வீரர்கள், தியன்கோங் 2 ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட உள்ளனர். அடுத்த கட்டமாக வரும் 2022- ஆம் ஆண்டில் விண்வெளியில் நிரந்தர ஆய்வுக் கூடத்தை அமைக்க சீனா திட்டமிட்டு வருகிறது.

 

 

 

சான்பிரான்சிஸ்கோ, செப்டம்பர் 8- உலகம் முழுவதும் உள்ள விவேக கைப்பேசி விரும்பிகளால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட  ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில்  அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த புதிய  ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ்  தொலைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனத்தின்  தலைமை செயல்முறை அதிகாரியான டிம்.குக் வெளியிட்டார்.   

இதன் வெளியீட்டைத் தொடர்ந்து,  ஐபோன் உருவாக்கத்தில் இடம்பெற்ற மென்பொருள், ஹார்ட்வேர் பொறியியலாளர்கள், டிஸ்ப்ளே, ஸ்டோரேஜ் பாதுகாப்பு அம்சங்கள், சென்சர்கள், பேட்டரி கேமரா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகளை அவர்கள் விளக்கினார்கள்.  

ஐபோன் 7, 32ஜிபி, 64 ஜி.பி, 64 ஜி.பி, 12ஜி.பி மற்றும்  256 ஜி.பி அளவைக் கொண்டு அதன் விலைகள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

டிஸ்ப்ளே 

 ஐபோன் 7, 4.7" அங்குல ரெட்டினா எச்.டி டிஸ்ப்ளேவுடன் 3டி தொடுதிரை மற்றும் 7.1 மி.மீ தடிமனுடன் இந்த புதிய ஐபோன் 7 அறிமுகம் கண்டுள்ளது. 

அதேவேளையில், ஐபோன்7 பிளஸ் ரக கைப்பேசிகள், 5.5" அங்குல ரெட்டினா எச்டி டிப்ளேயுடன், 3டி தொடுதிரை, மற்றும் 7.3 மிமீ தடிமன் கொண்டது. 

கேமரா  

இந்த புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ரக கைப்பேசிகள்,   டி.எஸ்.எல்.ஆர் கேமராவிற்கு இணையான புகைப்படங்களை எடுக்கும் வகையில்  மேம்படுத்தப்பட்டுள்ளன.ஐபோன் 7-இல் 12 எம்.பி பின்பக்க கேமராவும், 7 எம்.பி முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.  ஐ.போன் பிளஸ் அதிதூரத்தில் உள்ளதைப் படம் பிடிக்கும் வகையில் 12 எம்.பி பின்பக்க கேமராவும், 7 எம்.பி எச்.டி பின்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. 

இந்த இரு ஐபோன்களிலுமே நானோ சிம்கார்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இப்படியாக, பல எண்ணெற்ற நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் அறிமுகமாகியுள்ளது. 

 

More Articles ...