குவாந்தான், ஆகஸ்டு 8 -  உலகளவில் பரபரப்பாகப் பேசப்படும் ‘பொக்கேமோன் கோ’ விளையாட்டு மலேசியாவிலும் வந்தடைந்துள்ளதையடுத்து, மலேசியர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்தப் பொக்கேமோன் கோ மலேசியாவில் அறிமுகமானது முதலே பலரும் அதனைப் பதவிறக்கம் செய்து விளையாடுவதில் அதிக மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் குவாந்தானில் ஒரு தொழில் அதிபர் வாகனம் ஓட்டிக் கொண்டு அவ்விளையாட்டை விளையாடியதற்காகப் போலீஸ்சாரிடம் சிக்கிக்கொண்டார்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் ஸ்டேடியம் சாலையில் நிகழ்ந்தது என்று பகாங் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க துறையின் தலைவர் முகமட் நூர் யூசோப் அலி கூறினார்.

வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்திய காரணத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டன.

மலேசியாவிற்கு இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு சில நாட்களில் பல விபத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டும் போது கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று  போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் நேற்று மலேசிய ஓட்டுனர்களுக்குத் தமது ‘டுவிட்டரில்’ நினைவுறுத்தினார்.

நியூயார்க், ஆகஸ்டு 6-விண்வெளி தொலைநோக்கி ஆய்வுக்கலமான ‘கெப்லர்’ கண்டுபிடித்துள்ள புதிய கிரகங்களில், குறைந்தபட்சம் 20 கிரகங்களில் உயிரினங்கள் வாழத் தகுதியுடைய கிரகங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசா’, விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களைக் கண்டறிய ‘கெப்லர்’ எனும் தொலைநோக்கியை அனுப்பியுள்ளது. இது விண்வெளியிலுள்ள புதிய கிரகங்களைப் புகைப்படங்கள் எடுத்து பூமிக்குத் தகவல்களை அனுப்பி வருகின்றது. இதுவரையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த ஆய்வுகளை ‘நாசா’ மையத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில், உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாக 216 கிரகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவற்றில் 20 கிரகங்கள் பூமியைப் போன்று உயிரினங்கள் வாழ மிகவும் தகுதியுள்ளவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு பூமியில் இருப்பது போன்று மண்களும் பாதைகளும் உள்ளன.

 இந்தக் கிரகங்கள் யாவையும் நட்சத்திரங்களை ஒட்டியுள்ளன. இதன் மூலம், அங்கு சூரிய ஒளி, தண்ணீர் போன்றவை இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. மேற்கண்ட தகவல்களை ‘நாசா’ விஞ்ஞானி ரவிகுமார் கொபாரபு தெரிவித்துள்ளார்.

ஹாங்காங், ஜூலை 22- காப்புரிமை மீறலுக்காக சம்சுங் நிறுவனம், ஹுஹவேய் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளது. இதனால் இரண்டு விவேக கைப்பேசி நிறுவனங்களிடையே சட்ட மோதல் அதிகரித்துள்ளது.

சம்சுங் எலெக்டிரானிக் நிறுவனம் உலகின் முதல் நிலை விவேக கைப்பேசி தaயாரிப்பு நிறுவனமாகும். அதேபோல ஹுஹவேய் தரவரிசையில் மூன்றாவது நிலையில் உள்ளது. கைப்பேசி வியாபாரத்தில் இரு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இவ்வருடத்தில் விவேக கைப்பேசிகளின் ஒட்டு மொத்த மதிப்பு 332 பில்லியன் அமெரிக்க டாலராகும் (ரிம 1.35 திரிலியன்). 

தென் கொரியாவின் சம்சுங், கடந்த இரண்டு  வாரங்களுக்கு முன் தனது ஆறு காப்புரிமைகளை மீறி விட்டதாக ஹுஹவேய் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த காப்புரிமை மீறப்பட்டது என்ற விவரம் வழங்கப்படவில்லை.

பிரச்சனையைக் சுமூகமாக தீர்க்கவும் எங்களின் அறிவுச் சார்ந்த சொத்தைத் தற்காத்துக் கொள்ளவும் நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்தோம் என சம்சுங் கூறியுள்ளது. 

இதற்கு பதிலளித்த ஹுஹவேய் நிறுவனம், இது தொடர்பாக தங்களுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் கிடைக்கவில்லை. அவ்வாறு வந்தால் தேவையெனில் எங்களைத் தற்காத்து கொள்வோம் என அந்நிறுவனம் கூறியுள்ளது. 

ஹுஹவேய் நிறுவனம் கடந்த ஆண்டு 100 மில்லியன் விவேகக் கைப்பேசிகளை விற்றது குறிப்பிடத்தக்கது. s

நியூயார்க், ஜூலை 15- நீங்கள் இறந்த பின் உங்கள் பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளர் யார் என்பது குறித்து இப்போது நீங்களே முடிவு செய்யலாம். இதற்கான வாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்கியுள்ளது.

ஒருவர் இறந்த பின் அவரது பேஸ்புக் பக்கத்தை நெருங்கிய நண்பர்களோ, குடும்பத்தினரோ நிர்வகிப்பதற்கோ, பயன்படுத்துவதற்ககோ பேஸ்புக் நிறுவனம் இதுவரை அனுமதி அளித்ததில்லை. தற்போது அதற்காக சிறப்பு வாய்ப்பை பேஸ்புக் பக்கத்தில் உருவாக்கியுள்ளது.

நீங்கள் இறந்த பின் உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து Legacy Contact என்ற ஆப்சன் மூலம் தெரிவிக்கலாம். அவர்கள் உங்கள் முகப்பு மற்றும் படங்களை மாற்ற முடியும். இதற்கான முழுவிவரங்களை உங்கள் பேஸ்புக் பக்கத்தின் செட்டிங்கில் Legacy Contact என்ற ஆப்சனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

More Articles ...