நியூயார்க், ஜுலை 8- நாசாவின் பிரத்தியேக டிவிட்டர் பக்கத்தில் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்பட்டதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தற்காலிமாக அந்த  டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்,  கெப்ளர் அன்ட் கே 2 என்ற தனது அதிகாரப்பூர்வ  டிவிட்டர் பக்கத்தை  இயக்கி வருகிறது. இந்த பக்கத்தில் சில நாட்களுக்கு முன் ஊடுருவிய மர்ம நபர்கள், ஆபாசப் படங்களை அதில் பதிவேற்றம் செய்தனர். இது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக இந்த விஷ செயல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நாசாவின் கெப்ளர் பக்கத்தை முடக்கிய நாசா, அதில் இருந்த ஆபாசப் பதிவுகளை நீக்கிவிட்டு, மீண்டும் இணையப் பதிவுகளை துவக்கியுள்ளது.

லண்டன், ஜூலை 8- அஸ்டன் மார்ட்டின் மற்றும் ரெட் புல்ஸ் ஆகிய பிரபல கார் நிறுவனங்களின் தொழில்நுட்பத் திறனில் உருவாகி இருக்கும் புதிய அதி சூப்பர் ஹைபர் கார் ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டது.

லண்டனில் அஸ்டன் மார்ட்டின் தலைமையகத்தில் நடந்த இந்த கார் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இந்தக் காரைக் கண்டு வியந்தனர்.

எப்-1 கார்களை விட அதிக வேகத்தில் ஓடும் ஆற்றல் பெற்ற கார் என்றாலும் இது பந்தயக் கார் அல்ல. மாறாக, மக்கள் விரும்பினால், இந்தக் காரை எடுத்துக்கொண்டு மார்க்கெட்டிற்குக் கூட சென்று வரத் தக்க வகையில் சாலைகளில் ஓடக்கூடிய காராக இது விளங்கும். காரின் மத்தியில் இதன் வி-12 இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.  

இதற்கு AM-RB-001 என்று பெயர் தரப்பட்டுள்ளது. இந்தக் கார் ஆகக் கூடுதலாக 150 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும். இது சாத்தியமில்லையெனில் ஆகக் குறைந்தபட்சம் 99 கார்கள் தயாரிக்கப்படும் என்று அதன் தலைமை நிர்வாகி அண்டி பால்மெர் தெரிவித்தார்.

"நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்தக் காருக்காக மூன்று மடங்கு கூடுதலான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரின் மதிப்பு கிட்டத்தட்ட 25 லட்சம் பவுண்ட். இதன் பல்வேறு தொழில் நுட்பச் சிறப்புகள் குறித்த தகவல்களை அண்டி பால்மெர் வெளியிட மறுத்து விட்டார். 

 

 

 

 

 

 

ஆப்பிளின் ஐபோனை பயன்படுத்தும் பலர், அந்த போனில் உள்ள செயலிகள் மற்றும் அமைப்புகள் குறித்து எந்த அளவிற்கு முழுமையாக தெரிந்து வைத்துள்ளார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அந்த போனில் உள்ள ஆப்சன்கள் மற்றும் அமைப்புகள் குறித்து பலருக்கும் தெரியாது. ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை ஐபோனில் பார்ப்பவர்களுக்கு, அதின் அமைப்புகள் எப்படி செயல்படுகிறது என்பது அறியாத ஒன்றாகவே இருக்கிறது.

ஐபோனில் கேமராவிற்கும், ஃபிளாஷ் நடுவே ஏன் ஒரு துவாரம் இருக்குகிறது (Small Black Hole) என்பது தெரியுமா? அதை நீங்கள் ரீசட் பட்டன் (reset button) அல்லது ஏதாவது ஒன்றாக இருக்கும் என்று நினைப்பீர்கள்.

ஆனால் அது மீட்டமைக்கப்படும் துவாரம்(reset hole) கிடையாது. அந்த இடம் போனின் மைக் இருக்கும் இடம் ஆகும்.

அந்த சின்ன துவாரம் தான் மைக்ரோ போன் ஆகும். தொழில்நுட்ப ரீதியாக இவை மைக்ரோபோன் கிடையாது . அப்புறம் ஏன் அதை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா?

இந்த மைக்ரோபோன் ஆடியோவில் வரும் தேவையற்ற இரைச்சல்களை நீக்கும் என்று கூறுப்படுகிறது(noise canceling microphone)

பேசும்போது பின்பக்கத்தில் வரும் இரைச்சலை நீக்கி, கிளியராக ஆடியோ கேட்க வைக்கும் வகையில் அந்த மைக்ரோபோன் செயல்படுகிறது.

ஐபோனில் உள்ள மூன்று துவாரங்களில் பின்னால் உள்ள துவாரம் மட்டுமே noise canceling microphone ஆக செயல்படுகிறது.

கைத்தொலைப்பேசி கீழே விழுவது இயல்பே, ஆனால் அதுவே நீரில் விழுந்தால் என்ன ஆகும்? கைப்பேசி நீரில் விழுந்தால் தயவு செய்து இந்த செயல்களை எல்லாம் செய்து விடாதீர்.

முதலில் கைப்பேசியில் உள்ள எந்த ஒரு பட்டனையும் அழுத்தக் கூடாது. இது பிரச்சனையை அதிகரிக்கும். சிலர் கைப்பேசியை உடனேயே உலுக்குவார்கள். இதன் மூலம் உள்ளிருக்கும் நீர் வெளியேறிவிடும் என்று நினைத்தால் அது மிகவும் தவறு.

அடுத்தப்படியாக, கைப்பேசியைச் சார்ஜ் செய்வதையும் முற்றிலும் தடுக்க வேண்டும். பொதுவாக சார்ஜ் செய்தால் கைப்பேசி நன்றாக இயங்கும் என்று பலர் நினைப்பது உண்டு. ஆனால் அதை செய்யக்கூடாது.

மேலும், கைப்பேசி சிறிதளவு இயங்கினால், உடனே வேறு எந்த செயல்பாடுகளையும் செய்யக் கூடாது. முடிந்தவரை கைப்பேசி நீரில் விழுந்தவுடன் அதன் பாகங்களை பிரித்து வைத்தல் சிறப்பு. மேலும் உடனடியாக அதனை பழுதுப்பார்க்க அனுப்புகல் நல்லது.

 

More Articles ...