புது டில்லி, ஜூன் 8- தகவல் பறிமாற்றத்துக்கு உதவும் பேஸ்புக்குக்கு சவால்விடும் வகையில் பிராந்திய மொழிகளில் குறுஞ்செய்தி ‘ஷேர் சாட்’ என்ற புதிய விவேக கைத்தொலைப்பேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஐஐடியின் முன்னாள் மாணவரான பரீத் அசான் என்ற என்பவரால் கடந்த 2015ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘ஷேர் சாட்’ மூலம் பயனாளர்கள், வீடியோக்கள், ‘ஜிஐஎப்’ வகைப் படங்கள் மற்றும் இந்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் பாடல்களையும் பறிமாறிக் கொள்ளலாம். மேலும், தமிழ், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளையும் இணைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் போன்றே மற்ற பயனாளர்களைப் பின்தொடரும் வசதி மற்றும் அவர்களுக்குப் பிடித்தவற்றைப் பகிரும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. வாட்ஸ் அப்பில் பகிரப்படும் கேளிக்கை படங்கள் மற்றும் நகைச்சுவையான படங்களைப் பகிருவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த செயலி, தற்போது முழுமையான சமூக வலைதளமாக உருவெடுத்துள்ளது. மேலும், பயனாளர்களுக்கு உபயோகமான உடல்நலக் குறிப்புகளையும் ‘ஷேர் சாட்’ வழங்குகிறது.

எல்லையிலா வளர்ச்சியை நோக்கி உலக விஞ்ஞானம் வளர்ந்துக் கொண்டு வருகிறது. அதன் வளர்ச்சியின் புதிய பரிமாணம் தான் இது.

ஹர்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தேனீக்களை போன்ற எடையுடைய (100 Milligrams), ஆனால் சற்று பெரிய அளவிலான ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வகை ரோபோக்கள் தேனீ ரோபோக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

இந்த இயந்திரங்கள் மனிதனால் முடியாத, ஆபத்தான பல வேலைகளை செய்ய, பல அடைய முடியாத இலக்குகளை அடைய பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதைவிட முக்கியமாக இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளவும், மீட்பு பணிகளை மேற்கொள்ள உதவும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பில் Moritz Graule பிரிவினர் கூறுகையில், இந்த சிறிய ரோபோக்கள் விரைவில் சக்தியை இழந்துவிடும். ஆனால் நம்மை பொறுத்த வரையில் அதிக சக்தியின்றி அவை நீண்ட நேரம் செயல்படக்கூடியவையாக இருக்க வேண்டும். இதற்காக பூச்சியினங்கள் பின்பற்றும்,சக்தியை சேமிக்கும் முறையான தற்காலிக கீழிறங்கல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது என்றார்.

இவ்வகை ரோபோக்கள் மின்முனைக்கு ஏற்றம் வழங்கப்படும் போது அவை கண்ணாடி, மரம், இலைகள், சருகுகள் பேன்ற எவ்வகை மேற்பரப்பிலும் ஒட்டக்கூடியவை. பின்னர் ஏற்றம் வழங்கல் துண்டிக்கப்படும் போது அவை ஒட்டலிலிருந்து விடுபட்டு மீண்டும் பறக்கக் கூடியவையாகும்.

நியூயார்க், மே 25- கூகுள் நிறுவனம், ‘கூகுள் பிளஸ்’, ‘ஹேங் அவுட்’, ‘மெசெஞ்சர்’ என எத்தனையோ செயலிகளை அறிமுகப்படுத்தியும் ‘பேஸ்புக்’ -  ‘வாட்ஸ் அப்’ செயலிகளை மிஞ்ச முடியவில்லை. எனவே எப்படியாவது செயலிகள் உலகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இப்போது ‘அலோ’  மற்றும் ‘டுவோ’ எனும் புதிய செயலிகளை அறிமுகப்படுத்துள்ளது. 

குறுந்தகவல் செயலியான ‘ஆலோ’வில், தற்போது வாட்ஸ் அப்பில் மேம்படுத்தப் பட்டிருக்கும் குறுந்தகவல்களை பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியோடு, நமக்கு வரும் குறுந்தகவலுக்கு தானாக பதிலளிக்கும் வசதிகளும் உள்ளன. இதன்மூலம் நாம் பதிலளிக்க தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாராவது ‘ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதிலை ஒரு குறியீடுடன் முன்மொழியும்.

மிக மோசமான சூழ்நிலையில் கூட துல்லியமான  காணொளி பதிவு செய்ய உதவுவதே ‘டுவோ’ செயலியின் மிகப்பெரிய பலம். இந்த இரு செயலிகளும் ‘ஆன்டிராய்டு’ மற்றும் ‘ஐ.ஓ.ஸ்’ தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

அதேவேளையில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கை போல, இவை வெற்றி பெறும் அளவிற்கு இந்தச் செயலிகளில் பெரிதாக ஏதுமில்லை என்கிறார்கள் தொழில்நுட்ப நிபுணர்கள். 

நியூயார்க், மே 25- மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. ‘பைலட்’ என்ற மிகச் சிறிய கருவியைக் காதுகளில் பொருத்திக்கொண்டால், உலகின் பல மொழிகளையும் மொழிபெயர்த்துக் கொடுத்துவிடுகிறது. 

எந்த நாட்டுக்குச் சென்றாலும் இனி மொழி தெரியவில்லை என்ற கவலை இருக்காது. நியூயார்க்கைச் சேர்ந்த வேவர்லி நிறுவனம் மூன்று பாகங்கள் கொண்ட பைலட்டை உருவாக்கியிருக்கிறது. பைலட்டை வாங்கிக்கொண்டு, ஸ்மார்ட் போனில் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அவரவர் மொழியில் பேசினால், இன்னொரு மொழியில் மொழிபெயர்த்துச் சொல்லிவிடுகிறது ‘பைலட்’. நாம் பேசப் பேச உடனே மொழிபெயர்ப்பு வந்துவிடாது. சற்று நேரம் கழித்தே மொழிபெயர்த்து, ஒலி வடிவில் வெளிவருகிறது.

தற்போது ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளை மொழிபெயர்க்கிறது ‘பைலட்’. இந்தி, அரபிக், ஸ்லாவிக், ஆப்பிரிக்க மொழிகளை விரைவில் ‘பைலட்’ மொழிபெயர்ப்பில் கேட்க முடியும். 

“ஒரு பிரெஞ்சு பெண்ணைச் சந்தித்த பிறகுதான் எனக்கு இந்த மொழி பெயர்ப்பு யோசனை வந்தது. நவீனத் தொழில் நுட்பம் வளர்ந்த பிறகும் மனிதர்கள் இடையே மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பது என் எண்ணம். நீண்ட முயற்சியில் இந்த பைலட்டை உருவாக்கியிருப்பதில் மகிழ்ச்சி. பைலட் பற்றிய விளம்பரத்தை இதுவரை 70 லட்சம் மக்கள் பார்த்திருக்கிறார்கள். 

விரைவில் பைலட் விற்பனைக்கு வர இருக்கிறது. பைலட்டைப் பயன்படுத்தியவர்கள் தங்களின் அனுபவங்களைச் சொல்லும்போது எங்களுக்குப் பெருமிதமாக இருக்கிறது. இன்னும் உலகின் பல மொழிகளையும் மொழிபெயர்த்துச் சொல்லும் விதத்தில் பைலட்டைக் கொண்டு செல்வதே எதிர்காலத் திட்டம்” என்கிறார் வேவர்லி நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரு ஒசோவா.

 

More Articles ...