வாட்ஸ் ஆப் அவர்களது குறுஞ்செய்திச் செயலியை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிகையில் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களைத் தடிப்பாகவோ,  கோடிட்டோ, சாய்வாகவோ எழுதலாம்.  ஐ-போன்களில் வழக்கமான மேம்பாட்டுக்குப்பின் இந்த வசதி இயல்பாகவே தோன்றுகின்றது. ஆண்டிராய்டில் இன்னும் தேர்வு முறையிலேயே இருக்கின்றது.

இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்ஸ் ஆப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. ஆனால் செய்திகளை எழுதும்போது சொற்களுக்கு முன்னும் பின்னும், குறியீடுகளைக் கொண்டு, எழுத்துக்களின் தன்மையை மாற்றலாம்.

அந்தக் குறியீடுகள் இதோ:

• தடிப்பெழுத்து : சொற்களுக்கு முன்னும் பின்னும் விண்மீன் குறியைச்  (*) சேர்த்தால், அந்தச் சொற்கள் தடிப்பானத் தன்மையைப் பெறும்.  எ.கா.  *what* என்று எழுதினால் what என்று தடிப்பாகத் தோன்றும்.

• சாய்வெழுத்து : சொற்களுக்கு முன்னும் பின்னும் அடிக்கோட்டைச் (_) சேர்த்தால் அந்தச் சொல் சாய்வாகத் தோன்றும். எ.கா. _how_ என்று எழுதினால் how என்று சாய்வாகத் தோன்றும்.

• நாடுக்கோடு : சொற்களுக்கு முன்னும் பின்னும் ‘தில்டே’ எனும் குறியைச் (~) சேர்த்தால் அந்தச் சொல் நீக்கப்படவேண்டிய சொல்லைப்போல் நடுக்கோட்டுடன் தோன்றும். எ.கா. ~sorry~please என்று எழுதினால், ‘sorry’ எனும் சொல் நீக்கப்பட்டு please என்று எழுதப்பட்டதைப்போலத் தோன்றும் : sorryplease

இளைஞர்களையும் வளர்ந்து வரும் விஞ்ஞானத்தையும் பிரிக்க இயலாது என்ற ஒரு நிலைமை இன்று வந்துவிட்டது. அந்த வகையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இளைஞர்கள் ஒரு நாளைக்கு 3 மணிநேரத்தை கைத்தொலைப்பேசிகளில் செலவிடுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1980-ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெரும்பாலானவர்கள் ஒரு நாளைக்கு 3 மணிநேரத்திற்கும் அதிகமாக கைத்தொலைப்பேசிகளிலும் மற்றும் மடிக்கணினிகளிலும் தங்கள் நேரத்தைச் செலவிடுவதாக குளோபல் வெப் இண்டக்ஸ் எனும் புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. 18 வயது முதல் 32 வயதுள்ள ஒவ்வொரு இளைஞரும் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் 14 நிமிடங்கள் சராசரியாக கைத்தொலைப்பேசிகளில் மட்டும் செலவிடுவதாக தெரியவந்துள்ளது. 

அந்த புள்ளி விவரம் படி, 2012-ஆம் ஆண்டைக் காட்டிலும் தற்போது இளைஞர்களிடையே இந்த செயல் அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து அவர்கள் கைத்தொலைப்பேசிகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது உயரும் எனவும் உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவர்கள் குறிப்பாக விவேகக் கைத்தொலைப்பேசிகளில் தான் இன்னும் நேரத்தைச் செலவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மவுன்டென்வியூ, ஏப்ரல் 25- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது, சூரிய சக்தியை பயன்படுத்தி இயங்கும், ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம்.

இந்த விமானத்தில், 17 ஆயிரம் சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன.கடந்தாண்டு ஜூலையில், இந்த விமானத்தின் பேட்டரிகளில் ஏற்பட்ட கோளாறால் பயணம் தடைபட்டது. பல மாதங்களுக்கு பின், கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜப்பானிலிருந்து, 4,000 கிலோ மீட்டர், துாரப் பயணத்துக்கு பின், அமெரிக்காவின் ஹவாய்க்கு, இந்த விமானம் வந்து சேர்ந்தது.

அடுத்த கட்ட முயற்சியாக தற்போது, பசிபிக் பெருங்கடலை கடந்து, வெற்றிகரமாக கலிபோர்னியாவை இவ்விமானம் வந்தடைந்தது. சுவிட்சர்லாந்து நாட்டு விமானி பெர்ட்ரண்ட் பிக்கார்ட், விமானத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரேய்ஜாவிக், ஏப்ரல் 18-- சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் போத்தல்களுக்கு பதிலாக கடல்பாசியை மூலப் பொருளாகக் கொண்டு பாட்டில் ஒன்றை தயாரித்துள்ளார் ஐஸ்லாந்தைச் சேர்ந்த அரி ஜோன்சன் என்ற மாணவர். 

இந்த போத்தல்களில் குடிநீர் மற்றும் குளிர்ச்சியான பானங்களை அடைக்கலாம். போத்தலுக்குள் குடிநீர் இருக்கும் வரை அதன் வடிவமைப்பு மாறாது. போத்தலில் உள்ள குடிநீர் தீர்ந்த பிறகு தானாகவே போத்தல் சுருங்கி விடும். 

அடுத்த கட்டமாக, இப்படி சுருங்கும் குடுவைகளை, மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையான உணவுப் பொருளாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

More Articles ...