பெங்களூர், அக்.24- இந்திய மக்களின் வசதிக்காக இந்திய மொழிகளை பேசும் ஆர்ட்டிபிசியல் இண்டலிஜெண்ட்ஸ் ரோபோட் (artificial intelligence robot) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ரோபோ பெங்களூரில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் இருக்கும் மிகச் சிறிய தொழில் முனைவோர் நிறுவனம் இதனைக் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் யார் வேண்டுமானாலும் இந்தியாவில் உள்ள அனைவரிடமும் எளிதாக பேசமுடியும் எனக் கூறப்பட்டது. நாம் பேசும் மொழியை புரிந்து கொண்டு இது மற்றவருக்கு மொழிபெயர்க்கும். 

பெங்களூரில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'லிவ். ஏ.ஐ' என்ற நிறுவனம் இந்த ரோபோவை உருவக்கி உள்ளது.. இது 11 மொழிகளை பேசும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சுயமாக எந்திரமே சிந்திக்கும் திறனைத் தரும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வைத்து நிறைய வித்திசமான செயல்களை செய்ய முடியும். 

ஆப்பிள் போனில் இருக்கும் 'சிறி' மென்பொருள், விண்டோசில் இருக்கும் 'கார்டோனா' மென்பொருள் ஆகியவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதுதான். 

இந்தத் தொழில்நுட்பத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் சோதித்து வருகின்றது. இதில் நிறைய ஆய்வுகள் நடத்தி புதிய புதிய கண்டுபிடிப்புகளை இதை கொண்டு நிகழ்த்தி வருகின்றது. 

உலகின் பல நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும் இந்தியாவில் மட்டும் அதிக அளவில் இதில் யாரும் ஆராய்ச்சி நிகழ்த்தவில்லை. இந்நிலையில் இந்த தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக 'லிவ். ஏ.ஐ' என்ற நிறுவனம் பெங்களூரில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வந்தது. உலகில் உள்ள பெரிய நிறுவனங்கள் இதை எப்படி பயன்படுத்துகிறது என்ற ஆராய்ச்சி நடத்தியது.

தற்போது இந்தியாவில் இருக்கும் மொழிப்பிரச்சனையை தீர்ப்பதற்காக இந்த நிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்தியாவின் 11 முக்கிய மொழிகளைப் பேசும் வகையில்  ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது. 

இந்த தொழில்நுட்பம் கூகுளை விட மிகவும் எளிமையானது என கூறப்பட்டுள்ளது. அதன்படி நாம் பேசும் மொழியை அதுவே கண்டுபிடித்து நாம் விரும்பிய மொழியில் மாற்றி கொடுக்கும். மிகவும் துல்லியமான முறையில் இந்த தொழிநுட்பம் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

 

 

 

 

 

கோலாலம்பூர், அக்.14- ஆப்பிள் ஐபோனின் புதிய வெளியிடான ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் அதிக விலை என்று நினைக்கும் ஐபோன் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் வெறும் 3,649 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது. 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்ட 10-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஐபோன் எக்ஸ் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

மலேசியா ஆப்பிள் நிறுவனம் அதன் அகப்பக்கத்தில் ஐபோன் எக்ஸ் விலையை வெளியிட்டுள்ளது. 64 ஜிபி கொண்ட ஐபோன் எக்ஸ் 5,149 ரிங்கிட்டுக்கும் 256 ஜிபி கொண்ட ஐபோன் எக்ஸ் 5,899 ரிங்கிட்டுக்கும் விற்கப்படுகிறது.

ஐபோன் எக்ஸ் தொலைப்பேசியைத் திறக்க முக அடையாளத் தொழில்நுட்பத்தை  பயன்படுத்த வேண்டும். வயர்லெஸ் சார்ஜிங் முறையையும் இதில் கொண்டு வந்துள்ளனர். வயர் இல்லாமல் இந்தப் போன்களை சார்ஜ் செய்யலாம். 

 சான்பிரான்சிஸ்கோ, செப்.13- முதல் 'ஐ-போன்' வெளிவந்த கடந்த 10ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் 'ஐ-போன் 10' புதிய மாடல், தொழில்நுட்ப உலகின் புதிய திருப்பு முனையாக அமைகிறது என வர்ணிக்கப்பட்டது. 

ஆப்பிள் நிறுவனம் இம்முறை மூன்று வகையான ஐ-போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. 'ஐ-போன் 8', 'ஐ-போன் 8 பிளஸ்' மற்றும் பிரிமியம் 'ஐ-போன் 10' ஆகியவையே அந்த மூன்று புதிய வரவுகள் ஆகும்.

"முதல் ஐ-போன் வெளிவந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இதோ, இப்போது, இந்த இடத்தில், அறிமுகமாகும் ஐ-போன் 10 என்பது, அடுத்த 10 ஆண்டுகளுக்கான புதிய தொழிநுட்ப மாற்றங்களின் ராஜ பாதையாக அமையப் போகிறது" என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் கூக் அறிவித்தார்.

ஆப்பிள் நிறுவனத்தின் இன்னொரு மைல் கல் இந்த 'ஐ-போன் 10' எனலாம். கைத் தொலைபேசித் தொழில் நுட்பத்தில் "மாபெரும் அதிவேக முன் பாய்ச்சல் இது" என்று அவர் வர்ணித்தார். 

இந்த ஐ-போன் 10-இல், திரை என்பது போனின் கடைசி விளிம்பு வரையில் விரிந்திருக்கும். போனை செயல்பட வைக்கும் திறவுகோல் எது தெரியுமா? உங்கள் முகம்தான். முகத்தின் அடையாளம் கண்டு, உங்கள் போன் உங்களுக்காக திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், அதன் கேமிராவில் 'சூப்பர் விழிப் படலம்' உள்ளது. மிகத் துல்லியமானதாக இருக்கும். இந்த ஐ-போன் 10-இல் இரண்டு வகை அறிமுகமாகிறது. முதலாவது வகையின் விலை 999 அமெரிக்க டாலர். இரண்டாவது வகை 1,149 அமெரிக்க டாலர்.

அதேபோன்று ஐ-போன் 8 மற்றும் 8 பிளஸ் ஆகியவை கண்ணாடி உடலமைப்பைக் கொண்டவையாக  இவை விளங்குகின்றன. 

 

 

சான் பிரான்ஸ்சிக்கோ, ஆக.10- தொலைக்காட்சி சந்தையுடன் போட்டியிடும் வகையில் ‘பேஸ்புக்’ நிறுவனம் புதிய வீடியோ ஒளிப்பரப்பும் சேவை ஒன்றை புதன்கிழமையன்று அறிமுகம் செய்துள்ளது. 

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்படுவது போன்று முகநூலிலும் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப் படவிருக்கின்றன. இனிமேல், அமெரிக்காவின் தேசிய மகளிர் கூடைப்பந்து போட்டி, நேஷனல் ஜியோ கிராபிக்ஸ்சின் சாஃபாரி நிகழ்ச்சி மற்றும் டைம்ஸ் நிறுவனத்தின் பெற்றோரியல் நிகழ்ச்சி ஆகியவற்றை முகநூல் வழி  மக்கள் கண்டுக் களிக்கலாம்.

இந்த மறுவடிவமைக்கப்பட்ட வீடியோ சேவை ‘வாட்ச்’ என்ற பெயரில் அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் காண்கிறது. இந்தச் சேவையை முகநூல் செயலி, இணைய அகப்பக்கம் மற்றும் தொலைக்காட்சி செயலி மூலம் மக்கள் பெறலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது.

கடந்தாண்டு பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்த வீடியோ சேவையில் அசல் மற்றும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட வீடியோக்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக, முகநூல் பயனர்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த மே மாதம் வோக்ஸ் மீடியா, பஸ்பீட், ஏடிடிஎன், நைன் மீடியா ஆகிய பொழுதுபோக்கு அம்சம் கொண்ட நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களோடு பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அது மட்டுமல்லாமல், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை இந்த புதிய வீடியோ சேவையின் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியது.

More Articles ...