'வீடியோ கேம்'களுக்கு என்று உலகில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இன்று அதிநவீன கைப்பேசியால் பலர் மாய விளையாட்டில் மூழ்கினாலும், அன்று தொலைக்காட்சி தொடங்கி கணினி வரை வீடியோ கேம் விளையாடியதை யாராலும் மறுக்க முடியாது.

வீடியோ விளையாட்டுகள் தொடங்கியது என்னவோ 1947ஆம் ஆண்டில் தான். ஆனால் அது பிரபலமானது உலகளவில் தொலைக்காட்சிகள் பயன்படுத்தப்பட்ட 60ஆம் ஆண்டுகளில் தான். தொடக்கத்தில் கோடு வடிவில் விளையாட்டுகள் தொடங்கிய நிலையில் 90ஆம் ஆண்டுகளில் மனித மற்றும் மிருகங்களின் வடிவங்கள் அசலைப்போலவே உருவாக்கப்பட்டன. 

இருப்பினும் கார்ட்டூன் வடிவிலான விளையாட்டுகளான மாரியோ, ஸ்நேக் கேம் போன்ற விளையாட்டுகள் அதிக புகழ் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் கால ஓட்டத்தில் குறிப்பாக 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வீடியோ விளையாட்டுகளின் வளர்ச்சி அசூரத்தனமானது. இன்றைய இளையோர் பலர் அக்கால வீடியோ கேம்களைப் பார்த்திருப்பார்களா? கேள்வி பட்டிருப்பார்களா என்றால் இல்லை என்றே தைரியமாக கூற முடியும் இவர்களுக்காகவே காணொளி வடிவில் ஒட்டு மொத்த வீடியோ கேம்களையும் ஒன்றாக இணைத்துள்ளனர்.

மனிதன் எங்கிருந்து தோன்றினான் என்று யாராவது கேட்டால், புத்திசாலி எங்கே என்று யோசிப்பான், அதிபுத்திசாலியோ சட்டென்று அம்மாவின் வயிற்றில் என்பான். நமக்கு தெரிந்த விசயத்தை தானே நாம் கூறுவோம்.

'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்று சொல்லியே பழக்கப்பட்ட நாம், உண்மையில் எங்கு தான் மனித இனம் தோன்றியது என்பதைப் பார்ப்போம்.மனித இனம் முதலில் தோன்றியது ஆப்ரிக்காவில் அல்ல, ஐரோப்பாவில் தான் என்று ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதனின் மூதாதையர்களான ஏப்ஸ் வகை குரங்குகள் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி வருகின்றனர். இந்த நிலையில் மனித இனம் முதலில் தோன்றியது ஐரோப்பாவில்தான் என ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஜெர்மனியைச் சேர்ந்த டுபிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானி மாடேலைன் போமே தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்கேரியன் அறிவியல் அகாடமியை சேர்ந்த நிகோலாய் ஸ்பேஷவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 

இவர்கள் ஐரோப்பா கண்டத்தில் உள்ள கிரீஸ் நாட்டில் கிடைத்த மனிதனின் மூதாதையர்களான ஹோமினிட்களின் கீழ்தாடை, பல்கேரியாவில் கிடைத்த அந்த இனத்தின் கடைவாய்ப்பல் படிமங்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ததில் இந்த முடிவு கிடைத்துள்ளது. இதன்படி மனித இனம் தோன்றியது ஐரோப்பா கண்டத்தில் தான் என்று அவர்கள் கூறுகின்றனர். 

இவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த மனித மூதாதையர்களை விட 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஆராய்ச்சி தொடர்பாக அந்த குழுவின் தலைவர் போமே கூறுகையில், `‘இந்த படிமங்கள் 70 லட்சம் ஆண்டுக்கு முந்தையது. சிம்பன்சியும் மனிதனும் என 2 ஆக பிரிந்தது கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் தான். ஆப்ரிக்காவில் அல்ல’’ என்றார்.

கோலாலம்பூர், மே 21, ரான்சம்வேர் வைரஸ் மூலம் இணைய உலகை கலங்கடித்து வரும் வான்னக்ரையை யார் எங்கிருந்து இயக்குகிறார்கள் என்பது பற்றி தெரியாமல் உலகமே விழி பிதுங்கி நிற்கிறது. பலரின் கணினிகளைப் பதம் பார்த்துள்ள ரான்சம்வேர் எவ்வளவு பணத்தை கறந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் இந்த வைரஸை திறந்தால் அது உடனே நமது கணிணிக்குள் இறங்கி கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை என்கிரிப்ட் செய்துவிடும். இது நடந்து விட்டால் நம்மால் கணினியை இயக்கமுடியாத நிலை உருவாகி விடும். 

உங்களுடைய தகவல் மீண்டும் வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகையை பிட்காய்ன் எனும் சிஸ்டம் வழி பணம் செலுத்துமாறு அது உத்தரவிடுகிறது. இவ்வாறு ஊரை, உலகத்தை மிரட்டி இதுவரை 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வான்னக்ரை சம்பாதித்து உள்ளதாக பிரிட்டனின் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆனால், ஒரு சிலரோ இது மிக குறைவான கணிப்பு என்றும் யாருக்கு அனுப்பினோம் என்பது தெரியாத பிட்காய்ன் வழி அக்குழு இன்னும் அதிகமான அளவில் பணத்தைப் பெற்றிருக்கும் என கூறியுள்ளனர்.   

தோக்கியோ, மார்ச் 15- இன்னும் 100 ஆண்டுகளில் நாம் செவ்வாய்கிரகத்தில் வாழமுடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம் பேரப்பிள்ளைக்களுக்கான இடத்தை இப்போதே பதிவு செய்யவேண்டிய நிலை வந்துவிடும் போல..

ஜப்பானின் விண்வெளி வீராங்கனை நவோகா யமாஷாகி தான் இதைக் கூறியுள்ளார். தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் அசுர வேகத்தினைப் பார்க்கும்போது செவ்வாயில் குடியேறுவது விரைவில் சாத்தியமாகும் என அவர் கூறினார்.

ஓர் ஆங்கில செய்திக்கு அவர் அளித்த பேட்டியில், "தற்போது விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை நிலவுகிறது. 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் ஒருவரால் வாழ முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. சிறுநீரை சுத்திகரித்து நீராகவும் கரிமிலவாயுவை சுத்திகரித்து பிராணவாயுவாகவும் மாற்றும் தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இவற்றுக்கான செலவுகள் அதிகம் என்றாலும் அதனைக் குறைப்பதற்கான வழிகளும் ஆராயப்பட்டு வருகின்றன" என அவர் கூறினார்.

இதன்வழி, சும்மா ஊர் சுற்றிப் பார்க்க செல்வது போல செவ்வாயிக்கு செல்லும் காலம் நெருங்கி வருவதாக அவர் கூறினார்.

More Articles ...