அக்டோபரில் அழியப் போகிறதாம் பூமி! 

இயற்கை
Typography

அமெரிக்கா, ஜனவரி 1- 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பூமி முற்றிலும் அழிந்து நாசமாகப் போகிறது என விஞ்ஞான எழுத்தாளர் டேவிட் மேட் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.  டேவிட் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதியுள்ள பிளேனட் எக்ஸ்- தி 2017 அரைவல் எனும் புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோளான நிபிரு  பூமியை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது என்றும். அந்தக் கோள் பூமியின் தென் துருவத்தில் எதிர்வரும் அக்டோபர் மாதம் மோதி பெரும் சேதத்தை விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மோதல் காரணமாக பூமி தவிடுபொடியாகும் என்றும் அவர் அதிர்ச்சியளித்துள்ளார்.  தீக்கோளமான நிபிரு கோள் சூரிய குடும்பத்தின் விளிம்பில் உள்ளது என்றும் அப்படி ஒரு கோள் இல்லை என்றும் விஞ்ஞானிகள்  இருதரப்பு கருத்துகளைக்  கூறி வருகின்றனர். 

ஆனால், டேவிட் மேட் பூமியை விட பலமடங்கு பெரிய கோளான நிபிரு பல ஆண்டுகளாகப் பூமியை நோக்கிப் பயணிக்கிறது என்றும் எதிர்வரும் அக்டோபர் மாதம் பூமியின் மீது அது மோதும் என்றும் கூறுகிறார். 

எனினும், டேவிட்டின் இந்தக் கணிப்பை நாசா மறுத்துள்ளது. மேலும் நிபிரு கிரகம் வெறும் கற்பனை என்றும் தெரிவித்துள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS