தோக்கியோ, அக்.24- கர்ப்பப் பையில் ஏற்படுத்தும் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு வெங்காயம் உதவும் என்று மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வெங்காயம் ஒரு சிறந்த இயற்கை மருத்துவப் பொருள் என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும் முதன் முறையாக அது புற்றுநோய்க்கும் மருந்தாக பயன்படக்கூடியது எனத் தெரியவந்துள்ளது.

தற்போது கர்ப்பப் பைப் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையை வெங்காயம் கொண்டுள்ளது. ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் வெங்காயத்தில் உள்ள ஒளியோகனின்-ஏ (ஒ.என்.ஏ.) என்ற மூலப்பொருள், கர்ப்பப் பைப் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை பெற்றிருக்கிறது எனக் கண்டறிந்துள்ளனர்.

எனவே, கர்ப்பப் பைப் புற்றுநோயை குணப்படுத்தும் திறன் வெங்காயத்திற்கு இருப்பதால், வெங்காயத்தில் உள்ள ‘ஒனியோகின்-ஏ’ (ஒ.என்.ஏ.) மூலப் பொருளை இந்த வகைப் புற்றுநோய் மாத்திரைகளில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

 

 

லண்டன், செப்.27- ஜுபிடர் எனப்படும் மாபெரும் வியாழன் கிரகாத்தைச் சார்ந்து இருக்கும் நிலாக்களில் ஒன்றான யூரோப்பாவின் மேற்பரப்பில் அவ்வபோது தண்ணீர் வானை நோக்கி பீய்ச்சி அடிக்கப்படுவதை விண்வெளி தொலைநோக்காடி மூலம் கண்டறியப் பட்டிருக்கிறது என்ற உற்சாகமான தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 

கடந்த 2013ஆம் ஆண்டிலேயே யூரோப்பா நிலாவில் இப்படியொரு சம்பவம் நிகழ்வதை 'ஹுப்பள்' விண்வெளி தொலை நோக்காடி வழி கண்டறியப்பட்டது என்றாலும் அது குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை நடத்திவந்தனர். 

அண்மையில் மீண்டும் அத்தகைய நிகழ்வு இடம்பெற்றிருப்பதை 'ஹூப்பள்' வழி கண்டுபிடித்த விஞ்ஞானிகள், இந்த நிலாவின் மேற்பரப்பில் மிகப் பெரிய திரவ நீர்க்கடல் இருப்பதால், வானை நோக்கி பீறிடும் தண்ணீர் விவகாரம் விஞ்ஞானிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

குறிப்பாக, இத்தகைய புறச்சூழலில் இங்கு நுண்ணுயிர்கள் வாழக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். அந்த வகையில், பூமிக்கு அப்பால் உயிரினங்களைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளின் முயற்சிக்கு இதுவொரு முக்கிய தடயமாகக் கருதப்படுகிறது.

மேலும், இது பற்றிய தொடர் ஆராய்ச்சிகளுக்கு உதவும் நோக்கில் யூரோப்பா நிலாவில் பீய்ச்சி அடிக்கப்படும் தண்ணீரின் தன்மையைக் கண்டறிய, அதனூடாக விண் ஆய்வுக்கலம் ஒன்றை அனுப்பி ஆராய வாய்ப்புள்ளது.

அதேவேளையில், பீய்ச்சியடிக்கப்படும் தண்ணீரின் மாதிரியை பூமிக்குக் கொண்டு வந்து, அதில் இருக்கும் உயிரியல் கூறுகளை ஆராய்ச்சி செய்தவதற்கு ஏதுவான மாற்றுக் கலம் ஒன்றைப் பயன்படுத்துவதும் சாத்தியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதற்கும் அப்பால் இன்னொரு மாற்று வழியாக, யூரோப்பா நிலாவின் மீது விண் ஆய்வுக் கலத்தை தரையிறங்கச் செய்து, அதன் மேற்பரப்பில் பல கிலோ மீட்டர்கள் உயரத்திற்கு படர்ந்து கிடக்கும் பனிப் படுகைகளைத் துளையிட்டு, அதன் பரிசோதனை மாதிரிகளைப் பெறுவது பற்றியும் விஞ்ஞானிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

 

 

ஹாவாய், ஆக.29- செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வதை சாத்தியமாக்கும்  ஆராய்ச்சிக்காக ஹாவாயில் அமைக்கப்பட்ட விண்வெ ளிச் சூழலிலான முகாமில் ஓராண்டு காலத்திற்கு மேலாக தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த 6 விஞ்ஞானிகள் சோதனை களை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

## வீடியோ-நன்றி: பிபிசி##

செவ்வாய்க் கிரகத்தின் புறச்சூழலுக்கு ஏற்ப அந்தக் கிரகத்தில் மனிதன் எப்படி வாழ்வது என்பதை அனுபவ ரீதியிலும் , ஆராய்ச்சி ரீதியிலும் அறிவதற்காக, ஹாவாய் தீவின் மாவ்னா லோ மலைக் குன்றுப் பகுதியில் இந்தத் தனிமை ஆய்வுக்கூடம் அமைக்கப்ப ட்டது.

இந்தக் குன்றுப் பகுதியில் காணப்படும் மண் கூட செவ்வாய்க் கிரகத்தை ஒத்ததாக இருந்ததால், அப்பகுதி தேர்ந்தெடுக்க ப்பட்டது. குவிந்த மாடம் போன்று விளங்கும் ஆய்வுக் கூட முகாமிற்குள் அவர்கள் வாழ்ந்தனர். அதை விட்டு வெளியே வரவேண்டு மானால், அவர்கள் விண்வெளிப் பயண ஆடையைக் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். 

ஆய்வுக் கூடத்தில் இருக்கும் உணவுக்கு அப்பால் தங்களுக்குரிய உணவை அவர்கள் வெளியில் சுயமாகப் பயிர் செய்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக, செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வதற்காக அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளத் தேவையான அனைத்து சிரமங்களையும் அவர்கள் அனுபவ ரீதியில் இங்கே உணர்ந்தனர்.

இந்த விஞ்ஞானிகள் பயிற்சிப் பெற்ற குன்றுப் பகுதபோர் எரிமலையாகும். இது செவ்வாய்க் கிரக மேற்பரப்புக்கு இணையான ஒரு பகுதியாகும். நீண்ட காலம் செவ்வாய்க் கிரகத்தில் வாழப் பழகும் வகையில், தேவையான பயிற்சியைப் பெறும் நோக்கில் அமெரிக்க விண்வெளிக் கழகமான நாசா இந்த இடத்தில் முகாமை அமைத்தது. 

உளவியல் ரீதியில் விஞ்ஞானிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது ஆராயப்பட்டது என்கிறது நாசா. இந்த 6 விஞ்ஞானிகளும் இவர்களுக்கு அப்பால் வேறு யாரோடும் தொடர்பின்றி வாழ்ந்தனர். இ-மெயில் தொடர்பு மட்டுமே அனும திக்கப்பட்டது. 

எனினும், இ-மெயிலுக்கான பதில் 20 நிமிடங்கள் கழித்தே திரும்பக் கிடைக்கும். இதுதான் செவ்வாயிலிருந்து பூமிக்கு இ-மெயில் வந்து சேருவதற்கான கால இடைவெளி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஞ்ஞானிகள் குழுவில் பிரான்சைச் சேர்ந்த விண் உயிரியல் நிபுணர், ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி, மற்றும் விமானி, கட்டடக் கலை நிபுணர், ஊடகவியலாளர், மண்ணியல் ஆய்வாளர் என 4 அமெரிக்கர் நிபுணத்துவத் திறன் பெற்றவர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் நால்வர் பெண்களாவர். ஓராண்டு காலப் பயிற்சியை முடித்துத் திரும்பிய இவர்க ளுக்கு பத்திரிகையாளர்கள் புடை சூழ வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

 

நியூயார்க், ஆக.25- உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்புடைய தன்மையில் பூமியைப் போலவே விளங்கும் இன்னொரு கிரகத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள், பூமிக்கு ஆபத்துகள் வரும் காலங்களில் மனிதர்கள் புலம் பெயர்வதற்கு ஏற்ற கிரகம் இது என்று வர்ணித்துள்ளனர்.

இந்தப் புதிய கிரகத்தின் பெயர் 'புரோக்ஸிமா-பி' என்பதாகும். இதுபற்றிய சில தகவல்களை வெளியடாமல் வைத்திருந்த விஞ்ஞானிகள் நேற்று தான் வெளியிட முன்வந்தனர். 

புரோக்ஸிமா கிரகம் முற்றிலும் பூமியைப் போன்றதொரு கிரகமாகும். இது, புரோக்ஸிமா நட்சத்திர கூட்டமைப்பில் இடம்பெற்றி ருக்கிறது. நமது சூரியனைப் போன்ற ஒரு சூரியனை (நட்சத்திரத்தை) புரோக்ஸிமா கிரகம் ஒரு குறிப்பிட்ட தொலைவில் சுற்றிவருகிறது. பூமியைப் போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்தது.

குறிப்பாக, இந்த புரோக்ஸிமா நட்சத்திர மண்டலம் முழுவதுமே, உயிரினங்கள் வாழத் தக்க தன்மையைக் கொண்டிருக்கின்றது என்பது விஞ்ஞானிகளின் மதிப்பீடாகும்.

புரோக்ஸிமா நமது பூமியை விட சிறிதளவே பெரியது. தண்ணீர் வளத்தை தக்கவைத்துக் கொள்ளக் கூடிய வகையில், மிக ஏது வான குளிர் இங்கே நிலவுகிறது. இந்தத் தட்பவெப்ப நிலைதான் உயிர்கள் தோன்றி, செழிப்பதற்கு பொருத்தமான சூழல் என்கி றார்கள் விஞ்ஞானிகள்.

புரோக்ஸிமா கிரகத்தில் ஏற்கனவே உயிர்கள் இருக்கின்றனவா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது, அது பற்றி திட்ட வட்டமாக இப்போதைக்கு சொல்ல முடியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஆனால், பூமியைப் போன்று  கடல்கள், இதனுள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இது உயிர்கள் உருவாக உதவத் தக்கது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். தண்ணீர் வளம் அதன் மேற்பரப்பில் தங்கி இருப்பதற்கு தகுந்த வெப்பத்தைத் தரும் வகையில், பொருத்தமான தொலைவில் புரோக்ஸிமா கிரகம் அமைந்திருக்கிறது.

அது ஒருபுறம் இருக்க, பூமிக்கு ஆபத்து வரும் காலத்தில், அதாவது, அணுவாயுத அழிவுகள், பூமியின் மீது மோதக்கூடிய மிகப் பெரிய விண்கல் ஆபத்துகள் மற்றும் தடுக்கப் படமுடியாத நோய்களால் மனித இனம் அழியும் ஆபத்து போன்ற தருணங்களில் பூமியிருந்து புரோக்ஸிமா கிரகத்திற்கு மனிதர்கள் தப்பிச் செல்ல முடியுமா?

தற்போதைக்கு இது சாத்தியமில்லை என்றாலும் எதிர்காலத்தில் இது சாத்தியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த புரோக்ஸிமா கிரகம்  கிட்டத்தட்ட 4.27 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளது. 

அதாவது, ஓராண்டுக்கு ஒளி பயணப்படும் தூரத்தை வைத்துக் கணக்கிடப்படுகிறது. ஒளியின் பயண வேகம் என்பது ஒரு வினா டிக்கு 2 லட்சத்து 99 ஆயிரத்து 792 கிலோமீட்டர் என்பதால், அது ஓராண்டுக்கு எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம்.

எனவே இந்த ஒளியின் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் பயணம் செய்யும் ஆற்றலை நாம் பெற்றால் புரொக்ஸிமாவுக்குச் செல்வது சாத்திமாகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

'ஸ்டார்-ஸூட்' என்றழைக்கப்படும்  விண்வெளிப் பயணத்திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் தீவிரமடையும். 'நானோகலம்' என்ற ழைக்கப்படும் அதிநுட்ப, ஒளியை மிஞ்சும் வேகத்திலான பயணக் கலத்தை உருவாக்கும் திட்டங்களில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

More Articles ...