லண்டன், ஆக.12- இந்தப் பூமியில், நீண்ட காலம் உயிர் வாழக்கூடிய உயிரினம், கிரின்லேண்ட் சுறா மீன்கள் தான் என விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 28 விலங்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் வயது விபரம் ஆராயப்பட்டதில் இந்த கிரின்லேண்ட் சுறாக்களில் ஒன்று கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாக ஜாலியாக வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதன் வயதைக் கண்டறிய 'ரேடியோ கார்பன்' முறைப் பயன்டுத்திய விஞ்ஞானிகள், அந்தப் பெண் சுறா 400 வயதைக் கடந்து விட்டது என்பதை கண்டுபிடித்தனர். கிரின்லேண்ட் பகுதியில் இவை அதிக அளவில் இருந்து வந்ததால் இதற்கு கிரின்லேண்ட் சுறா எனப் பெயர் வந்தது.

இருப்பினும், கிரின்லேண்டுக்கு அப்பாலுள்ள கடல்களிலும் இந்த வகைச் சுறாக்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை சுறா, ஆண்டுக்கு ஒரு சென்டிமீட்டர் தான் வளரும். அது இனவிருத்திக்கான பருவ வயதை எட்டுவதற்கே சுமார் 150 ஆண்டுகள் ஆகும்.

இதற்கு முந்திய ஆய்வுகளின்படி, அம்பு போன்ற தலையைக் கொண்ட ஒரு  திமிங்கலத்திற்கு 211 வயது எனப் பதிவு செய்ய ப்பட்டுள்ளது. ஆனால், புதிய ஆய்வின் வழி தற்போது இந்த பெண் சுறா தான் அதிக காலம் வாழும் உயிர் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்று டென்மார்க்கைச் சேர்ந்த  கடல் உயிரியல் துறை விஞ்ஞானியான ஜுலியஸ் நெல்சன் சொன்னார்.

இந்த வகை சுறாக்கள் 5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. வட அட்லாண்டிக் கடலின் மிகக் குளிர்ந்த நீரின் ஆழமான பகுதியில் மிக மெதுவாக நீந்தி, பரபரப்பே இல்லாத ஒரு வாழ்க்கையை அவை வாழ்ந்து களிக்கின்றன.

அவை நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கு காரணம், அவற்றின் இந்த இலகுவான வாழ்க்கைச் சூழலும் அதன் வளர்ச்சி வேகம் மிக மிகக் குறைவாக இருப்பதும் தான் என்று ஜுலியஸ் நெல்சன் தெரிவித்தார்.

 

 

 

வாஷிங்டன் , ஆக.10- புரியாத சூரியனின் மர்மங்கள் குறித்து அறிந்து கொள்ள நாசா விஞ்ஞானிகள்  தொடர்ந்து கடுமையாக போராடி வருகின்றனர். சூரியனின் மேற்பரப்பில் வெடிப்பு ஏற்பட்டு மிகப் பரவலான அளவில் நெருப்பு பீய்ச்சி அடிக்கப்படுவதை காட்டும் புதிய தோற்றங்களை நாசா விண்வெளி ஆய்வுக் கழகம் வெளியிட்டுள்ளது.

நாசா அனுப்பியிருக்கும் சூரியனைக் கண்காணிப்பு விண்கலமான ஐஆர்ஐஎஸ் சூரியனின் மத்திய பகுதியில் உள்ள கதிர் வீச்சைப் படம் பிடித்துள்ளது.

சக்தி வாய்ந்த வெடிப்புகள் ஏறபடும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் வாய்ந்த கதிர்வீச்சு மூலம் சூரியனில் இருந்து காந்த சக்தி வெளிப்படுகிறது.

இதனால் விண்வெளியில் சூரியனை சுற்றியுள்ள வளிமண்டலம் வெப்பமடைகிறது. இதனால் சக்தி வாய்ந்த துகள்கள் வெளிப்ப டுகின்றன. சூரியன் தொடர்ந்து தன்னுடைய அமைப்பை மாற்றி கொண்டே உள்ளது. ஐஆர்ஐஎஸ்-சின் இந்த புகைப்படண்க்களும் வீடியோவும் சூரியனைப் பற்றிய அதிக அளவு தகவல்கள் அறிந்து கொள்ள தனது விஞ்ஞானிகளுக்கு உதவியாக அமைந்தி ருப்பதாக நாசா தெரிவித்தது. 

ஐஆர்ஐஎஸ் அனுப்பியுள்ள 9 வினாடி வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. சூரிய மேற்பரப்பில் வெடிப்புகள் மூலம் சூரிய குழம்பு அலைஅலையாக மேல் எழும்புகிறது.

சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் தொடர்ந்து இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் வெப்பம், பூமியை எட்டுவதால்தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. 

சூரியன் நீண்ட தூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட, அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். 

நியூயார்க், ஜூலை 29- பூமியின் புறச் சூழலையும் தாண்டி, விண்வெளியின் ஆழ் பகுதிக்குச் சென்று வந்த விண்வெளி வீரர்களி டையே இருதய நோய் மரண விகிதம் கூடுதலாக இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களில் பலர் எளிதில் இருதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

நிலவுக்கு பயணம் மேற்கொண்டதன் மூலம் விண்வெளியில் மனிதர்களின் நடமாட்டத்திற்குப் பாதையை வகுத்த விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் போன்றவர்கள் தங்களுடைய உடல் நலனில் பெரும் தியாகங்களை செய்து ள்ளனர் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

முன்னாள் விண்வெளி வீரர்கள் 42 பேரின் மரண விகிதம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 1960ஆம் ஆண்டுகளின் இறுதியில் மற்றும் 1970ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அப்பல்லோ விண் பயணங்களில் பங்கெடுத்த 7 வீரர்களும், இதுவரை விண்வெ ளிக்கு செல்லாத 35 வீரர்களும் அடங்குவார்கள்.

விண்வெளி பயணங்களை மேற்கொள்ளாத அல்லது குறைந்த உயரப் பயணங்களை மட்டும் மேற்கொண்ட விண்வெளி வீரர்க ளையும் காட்டிலும், ஆழமான விண்வெளி பயணங்களை மேற்கொண்டவர்களுக்கு பூமியின் காந்தப் புலத்திற்கு வெளியே உள்ள காஸ்மிக் கதிர்வீச்சு காரணமாக இருதய நோயினால் ஏற்படும் மரணத்தை காட்டிலும் ஐந்து மடங்கு அதிமாக இருப்பதாக இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. எனினும், இந்த ஆய்வின் முடிகளை தொடர்ந்த்து நிராகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

வாஷிங்டன், ஜுலை 20- விண்வெளியில் நீண்டகாலமாக பிரபஞ்சத்திலுள்ள கிரகங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை இதுவரை 104 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. அவற்றில் 4 கிரகங்களில் மட்டும் உயிரினங்கள் வாழ்வதற்குரிய கிரகச் சூழல்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியைப் போன்ற பருவ நிலைகளையும், இதர சூழல்களையும் கொண்ட கிரகங்களைக் கண்டறிவதற்கான ஒரு முயற்சியாக, அமெரிக்க விண்ண்வெளிக் கழகமான நாசா, கடந்த 2009ஆம் ஆண்டு கெப்ளர் என்ற விண்வெளி தொலைநோக்கியை அனுப்பியது.

விண்வெளியில் நட்சத்திரங்களை கிரகங்கள் கடக்கும்போது, நட்சத்திரத்தின் வெளிச்சத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு கிரகங்களின் தன்மையை கெப்ளர் ஆய்வு செய்தது. 

அந்த வகையில், கெப்ளர் அனுப்பிய தகவல்களைக் கொண்டு சூரியக் குடும்பத்துக்கு வெளியே 197 புதிய கிரகங்கள் இருக்கலாம் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பூமியிலுள்ள தொலைநோக்கி மையங்கள் பலவற்றின் தகவல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், அந்த 197 பொருள்களில் 104 பொருள்கள் கிரகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

அவற்றில் "கே2-72' என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 4 கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகளால் ஆனவையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறினர். பூமிக்கு 181 ஒளியாண்டுகள் தொலைவில்  இருக்கும் அந்த நட்சத்திரம், சூரியனில் பாதி அளவா கவும், குறைந்த ஒளி கொண்டதாகவும் உள்ளது. அந்தக் கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

More Articles ...