லண்டன்,  ஜூன் 7- மரபணு திருத்த (Gene Editing) தொழில்நுட்பம் மூலம் மரபணுக்களை எளிதாகவும் விரைவாகவும் மாற்றியமைக்க இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மனித உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான உடலுறுப்புகள் பற்றா நிலையில் இந்த ஆய்வின் முடிவு தீர்வாக அமையும் என்று சில நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்த ஆய்வு பல தார்மீக கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

தற்போதைய ஆய்வில் மனித குருத்தணுக்கள் (stem cell) கருவுற்று ஒரு நாளே ஆன பன்றியின் கருவுக்குள் ஊசிமூலம் செலுத்தப்பட்டன. பன்றிக்குள் மனித கணையத்தை வளர்ப்பதற்கு கலிபோர்னிய பல்கலைக்கழக பேராசிரியர் பப்லோ ரோஸ் முயற்சி செய்திருக்கிறார்.

"இந்த பன்றியின் கரு இயல்பாக வளரும் என்று எதிர்பார்கிறோம். ஆனால் அதன் கணையம் முழுக்க முழுக்க மனித செல்களில் இருந்து வளரும். அந்த கணையம் மனிதர்களுக்கு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படும்", என்கிறார் அவர்.

இது மரபணு திருத்தும் தொழில்நுட்பம் என்றழைக்கப்படுகிறது. பன்றியின் கருவுக்குள் கணையத்தை உருவாக்குவதற்கான மரபணு உத்தரவுகளை, மூலக்கூற்று கத்தரிக்கோல் மூலம் அகற்றுகிறது. அந்த வெற்றிடத்தை மனித செல்களால் நிரப்பி மனித கணையத்தை வளர்க்கலாம் என்பது நோக்கம். இதே தொழில்நுட்பம் மற்ற மனித உறுப்புகளையும் வளர்க்க உதவக்கூடும்.

இதில் முக்கியமாக, இப்படியான பன்றிக்கருக்களின் வளரும் மூளைகளில் மனிதத்தன்மைகள் உள்வாங்கப்படுகின்றனவா என்பது ஆராயப்படும்.

இந்த கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை என்று இந்த துறையின் முன்னோடியான மினிசோட்டா பல்கலைக்கழக பேராசிரியர் வால்டர் லோ பிபிசியிடம் தெரிவித்தார்.

"நாங்கள் மனிதர்களுக்காக சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என்று எதை உருவாக்கினாலும் மூளைக்குள் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கண்காணிப்போம். அது பெருமளவு மனிதனைப்போல் இருந்தால் அந்த சிசு பிறப்பதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்", என்றார் அவர். விலங்குப் பண்ணைகளை எதிர்க்கும் செயற்பாட்டாளர்களோ உடலுறுப்புகளுக்காக விலங்குப்பண்ணைகள் உருவாக்கப்படுவதை எதிர்க்கிறார்கள்.

விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கான இன்னொரு வழி உருவாவது தமக்கு கவலையளிப்பதாக விலங்கியல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவரான புபீட்டர் ஸ்டீவன்சன், தெரிவித்தார்.

"முதலில் அதிகமானவர்களை உடலுறுப்பு தானம் செய்யவைப்போம். அதன் பின்னும் தேவைப்பட்டால் பன்றிகளை பயன்படுத்துவதைப்பற்றி பரிசீலிக்கலாம். அப்போதும் கூட இதற்காக கூடுதலாக பன்றிகள் வளர்க்காமல், மனிதர்க்ள் உண்ணும் இறைச்சியின் அளவைக் குறைத்த பிறகே இதை செய்யலாம்", என்றார் அவர். உலக அளவில் உடலுறுப்புக்காக காத்திருப்போர் பட்டியலில் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்.

அவர்களில் பலர் உடலுறுப்புகள் கிடைக்காமல் ஆண்டுதோறும் இறக்கிறார்கள். ஆனாலும் மரபணு திருத்தம் மூலம் பன்றிகளின் கருக்களில் வளரும் உடலுறுப்புகள் மனிதர்களுக்குப் பொருத்தும் பரிசோதனைகள் நடக்க இன்னும் நீண்டகாலம் பிடிக்கக்கூடும்.

தினம் தினம்  சூரியனைப் பார்க்கிறோம். தகதகவென எரிந்து உலக உயிர்களை வாழ வைக்கும் சூரியன் எப்போது உதித்தது என என்றாவது யோசித்ததுண்டா? உங்களுக்கான பதிலை  நாசா தந்துள்ளது.  ஆம், 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பு தான் இன்றைய பலகோடி உயிர்வாழ காரணம். சூரியனின்   வெப்ப ஆற்றல் மூலம்தான் குளிர்மையாக இருந்த புவி வெப்பமடைந்து உயிர்கள் வாழ்வதற்கு உகந்த கிரகமாக மாறியது என நாசா தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஆய்வில் நாசா விஞ்ஞானிகள் ஆய்வில் பின்வரும்  தகவல்கள்  குறிப்பிட்டுள்ளன: 

சுமார் 400 கோடு ஆண்டுகளுக்கு முன் சூரியன் தோன்றிய போது தற்போது இருக்கும் வெப்பமும், பிரகாசமும் இல்லை. ஆனால் எப்போதும் போல அதன் வெளிபுறம் எரிமலை போன்று வெடித்துக் கொண்டு தான் இருந்தது.

 அப்படி வெடித்து கொண்டிருக்கும் போது வெளிப்பட்ட வெப்பத்தில் எண்ணற்ற மூலகூறுகள் தான் பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான ஆற்றலையும், சூழலையும் உருவாக்கி உள்ளது.

முன்பு இருந்த சூரியன் தனது ஆற்றலை இழந்த பின்னர், இளம் நட்சத்திரம் ஒன்று சூரியனாக உருவெடுத்தது. அதுதான் தற்போது நமக்கு சூரியான உள்ளது.

 மேலும், சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றல்கள் தான் வாழ்க்கைக்கு தேவையான டிஎன்ஏ, ஆர்என்ஏ போன்ற மூலக்கூறுளாக உரு மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றை விட நீரின் அழுத்தம் அதிகம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அதற்குக் காரணம் நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று நெருங்கி இருப்பதே ஆகும். 

இதனால் நீரினை ஊடுருவிக் கடந்து செல்வது எந்த ஒரு பொருளுக்கும் கடினமானதே. இந்தத் தன்மையின் வீரியத்தை விளக்க,  ஒரு இயற்பியல் அறிஞர் செய்த ஆய்வு அதிர்ச்சிகரமானது. 

ஆன்ட்ரியாஸ்  வாள்  (Andreas Wahl) எனும் அந்த இயற்பியல் துறை வல்லுனர்,  நீச்சல் குளத்தில் இறங்கி தனது நெஞ்சிற்கு நேரே, சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஸ்டேண்டில் பொருத்தப்பட்ட துப்பாக்கியை வைத்து வெடிக்கச் செய்கிறார்.

தரையில் வெடிப்பதைப் போன்றே பேரொலியுடன் துப்பாக்கி வெடித்தாலும், தோட்டாவானது நீரை ஊடுருவி செல்ல முடியாமல் வேகம் குறைந்து சிறுது தூரத்திலேயே அந்த நீச்சல் குளத்தடியில் சென்று விழுகிறது. இக்காட்சியை அதிவிரைவு கேமராவில் தெளிவாய் பதிவு செய்துள்ளனர். இதனை வேக குறைவில் பார்க்கையில் வியப்பாய் உள்ளது.

லண்டன், மே 10- இந்த பூமியில் அறிவியல் ரீதியாக 3 லட்சத்து 90 ஆயிரத்து 900 தாவரங்கள் இருக்கின்றன என்று அண்மைய கணக்கெடுப்புகள் கூறு கின்றன. இங்குள்ள அரச தாவரவியல் துறை, இந்த புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகளவிலான தாவரங்கள் பற்றிய முதல் மதிப்பீடு இதுவென கூறப்பட்டது. 2015ஆம் ஆண்டில் இருந்ததைவிட இவ்வாண்டு 2,034 புதிய தாவரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், இந்தத் தாவரங்களில் 21 விழுக்காடு இனங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன. பருவநிலை மாற்றங்கள், வாழ்வாதார இழப்பு, நோய்கள் மற்றும் புதிய இனங்களால் அழிக்கப்படுதல் போன்றவற்றினால் தாவர இனங்களிடையே அழிவு ஏற்பட்டு வருவதாக அரச தாவரயியல் துறை அறிவித்திருக்கிறது.

இந்த மண்ணில் எத்தனை வகை தாவரங்கள் உள்ளன? அவை எங்கெங்கே உள்ளன? இந்த இனங்களுக்கு இடையே எத்தகைய உறவுகள் நிலவுகின்றன? என்பது பற்றி அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும். ஏனெனில், நம்முடைய நல்வாழ்வுக்கு தாவரங்கள் மிக முக்கியாமான அடிப்படை என்று அரச தாவரவியல் துறையின் பேராசிரியர் கேத்தி வில்லிஸ் தெரிவித்தார்.

 

 

 

More Articles ...