நியூயார்க், ஜன.17- உலகில் எத்தனையோ வினோதங்கள், அவற்றில் இதுவும் ஒன்று..., இரண்டு சூரியன்கள் ஒரே சமயத்தில் தோன்றினால், அதுவும் பொங்கல் காலத்தில் தோன்றினால் குழப்பமாக இருக்காதா?

அமெரிக்காவின் சில பகுதிகளிலும் கனடாவின் சில பகுதிகளிலும் கடந்த இரண்டு தினங்களாக இத்தகைய இரட்டைச் சூரியனின் தோற்ற த்தைக் காணமுடிந்தது.

 

இன்னும் ஓரிரு தினங்களுக்கு இது நீடிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, கோடை காலத்திலும் இலையுதிர்க் காலத்திலும் இதனைக் காணலாம். இருப்பினும், இவற்றை இரட்டைச் சூரியன்கள் என்று கருதுவோமேயானால் அது பிழையாக அமையும்.

உண்மையில், இது இரட்டைச் சூரியனின் தோற்றமல்ல என்கிறார்கள் நிபுணர்கள். காலையில் சூரியன் உதிக்கும் போது இது நிகழ்வதுண்டு. சூரியனின் ஒளி, அதன் புறச்சுழலிலுள்ள பனிப் படிகங்களின் மீது படரும் போது உண்மையான சூரியனின் பிரதிபிம்பம் ஒன்று வெளிப்படும்.

அந்தப் பிரதிபிம்பம் தான் இரட்டை சூரியன்களாக நமது பார்வைக்குப் புலப்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இதனை அறுவடை நிலா என்றோ அல்லது வேட்டை நிலா என்றோ அழைப்பதும் உண்டு.

அமெரிக்கா, ஜனவரி 1- 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பூமி முற்றிலும் அழிந்து நாசமாகப் போகிறது என விஞ்ஞான எழுத்தாளர் டேவிட் மேட் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.  டேவிட் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதியுள்ள பிளேனட் எக்ஸ்- தி 2017 அரைவல் எனும் புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோளான நிபிரு  பூமியை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது என்றும். அந்தக் கோள் பூமியின் தென் துருவத்தில் எதிர்வரும் அக்டோபர் மாதம் மோதி பெரும் சேதத்தை விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மோதல் காரணமாக பூமி தவிடுபொடியாகும் என்றும் அவர் அதிர்ச்சியளித்துள்ளார்.  தீக்கோளமான நிபிரு கோள் சூரிய குடும்பத்தின் விளிம்பில் உள்ளது என்றும் அப்படி ஒரு கோள் இல்லை என்றும் விஞ்ஞானிகள்  இருதரப்பு கருத்துகளைக்  கூறி வருகின்றனர். 

ஆனால், டேவிட் மேட் பூமியை விட பலமடங்கு பெரிய கோளான நிபிரு பல ஆண்டுகளாகப் பூமியை நோக்கிப் பயணிக்கிறது என்றும் எதிர்வரும் அக்டோபர் மாதம் பூமியின் மீது அது மோதும் என்றும் கூறுகிறார். 

எனினும், டேவிட்டின் இந்தக் கணிப்பை நாசா மறுத்துள்ளது. மேலும் நிபிரு கிரகம் வெறும் கற்பனை என்றும் தெரிவித்துள்ளது. 

 நியூயார்க், டிசம்.14- சுமார் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது விழுந்த விண்கல்லின் தாக்கத்தினால் அன்றைய அசுர விலங்கின மான டைனோசோர்கள் அழிந்தது தொடர்பில் புதிய தடயங்கள் கிடைத்துள்ளன.

டைனோசோர்களின் அழிவுக்கு வழிவகுத்த அந்த விண்கல் பற்றிய தடயங்களைக் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த முயற்சியில் ஒரு புதிய தடயம் கிடைத்திருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

இப்போது மெக்ஸிகோ வளைகுடாவாக கருதப்படும் இடத்தில் மாபெரும் விண்கல் விழுந்ததற்கான மிகப்பெரிய பள்ளம் இருக்கிறது. இந்த விண்கல் பள்ளத்தை அனைத்துலக விஞ்ஞானிகள் குழு ஒன்று மிக ஆழமாகத்  துளையிட்டு ஆய்வு நடத்தி வருகிறது.

பூமியை தாக்கிய விண்கல்லில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படும் அதிக அளவிலான நிக்கல், இங்கு பெருமளவில் இருப்பதை அவர்கள் கண்டறிந்து உள்ளனர். இந்த நிக்கல் படிமம், புதிய தடயங்களைக் கண்டறிய தங்களுக்குப் பெரிதும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்த னர்.

ஒட்டுமொத்தமாக பூமியின் உயிரினங்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த விண்கல் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டிய  அவசியம் உள்ளது. 

இது எந்த அளவுக்கு பூமியின் உயிரின அழிவுக்குக் காரணமாக இருந்தது என்பதைக் கண்டறிய முடியுமானால், எதிர்காலத்தில் இத்தகைய விண்கல்களால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையாகச் செயல்படமுடியும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.

கோலாலம்பூர், நவ.14- சிறுவயதில் நமக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று 'நிலா நிலா ஓடி வா'. தூரத்தில் இருக்கும் நிலாவை அருகில் வா என்று கூறுவது போல பாடியபோது இருந்த ஏக்கம் இன்று நினைவாக போகிறது. ஆம். இன்று பூமிக்கு அருகில் நிலா வரபோகிறது 'சூப்பர் மூன்'னாக.

68 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலா. சாதாரண நாட்களில் நாம் காணும் அளவை விட 14 விழுக்காடு மிக பெரிதாக இன்று நிலா காணப்படும். அதோடு, மற்ற நாட்களில் தெரியும் வெளிச்சத்தை விட 30 விழுக்காடு அதிக வெளிச்சத்துடன் நிலா தெரியும்.

இன்று வானிலை சரியாக இருந்தால், மலேசியாவில் இரவு 7.24 மணி முதல் நிலாவினை காணலாம். முழுநிலாவினை இரவு 9.54 மணிக்கு பார்க்கலாம். இந்த முழு நிலாவினை மறுநாள் காலை வரை பார்க்கமுடியும்.

கடந்த 1948ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு தோன்றியது. அதன் பிறகு இவ்வளவு அருகில் இன்று இந்த நிலா தோன்றுகிறது. அதுவும் இது சிவப்பு நிறத்தில் தோன்றும் எனவும் கூறப்படுகிறது. 

ஏன் இன்று சூப்பர் நிலா ஏற்படுகிறது?  பூமியின் நீள்வட்டப் பாதையில் நிலவு சுற்றி வருகிறது. பூமியில் இருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 40 கிமீ தூரத்தில் நிலவு இருக்கும். 

சில நேரங்களில் பூமியில் இருந்து 4 லட்சத்து 2 ஆயிரத்து 60 கிமீ தூரத்திலும் இருக்கும். தற்போது 3 லட்சத்து 50 ஆயிரம் கிமீ தொலைவில் நிலவு வருகிறது. அதனால் பெரிய அளவில் உள்ளது போல தெரியும்.

இன்று தெரியும் பெரிய நிலாவைப் பார்க்க தவறினால், அடுத்த பெரிய நிலாவைக் காண நீங்கள் 18 வருடம் காத்திருக்கவேண்டும். எனவே, மறக்காது, இன்பம் பொங்கும் வெண்ணிலாவை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பார்த்து ரசியுங்களேன். 

More Articles ...