காணாமல்போன சந்திராயான்-1 விண்கலத்தை கண்டுபிடித்தது நாசா!

Science
Typography

 பாசடேனா, மார்ச்.11- கடந்த 2008-ஆம் ஆண்டில் நிலாவுக்கு இந்தியா அனுப்பிய விண்கலம் காணாமல் போய்விட்ட நிலையில், அது இன்னமும் நிலாவைத்தான் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது என அமெரிக்க விண்வெளிக் கழகமான நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவின் சந்திராயான்-1 என்ற அந்த விண்கலம் கடந்த 2009ஆம் ஆண்டு 29ஆம் தேதி முதல் விண்வெளி முற்றாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டு காணாமல் போன கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டது.

இது 2008-ஆம் ஆண்டு அக்டோபரில் விண்வெளிக்கு அனுப்பட்டு ஓராண்டு காலம் மட்டுமே இந்திய விண்வெளிக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பில் இருந்தது.

தற்போது அது இன்னமும் அங்குதான் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. நிலாவின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 200 மைல் உயரத்தில் அது சுற்றிக் கொண்டு இருக்கிறது.

சந்திராயான்-1 விண்கலத்தை மட்டுமின்றி, தனது சொந்த விண்கலங்களில் ஒன்றான எல்ஆர்ஓ எனப்படும் விண்கலத்தையும் நாசா கண்டுபிடித்திருக்கிறது. நிலாவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக அனுப்பட்ட இந்தக் கலம் பூமியிலுள்ள கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்து வெகுகாலமாகிறது.

காணாமல் போன விண்கலங்களையும் செயற்கை கோள்களையும் கண்டுபிடிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாக இதுவரை இருந்து வந்தது. தற்போது நாசா தனது புதிய தொழில்நுட்ப உதவிகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS