தியாகமே உந்தன் மறுபெயர் அப்பாவோ...!

Special Article
Typography

கருவில் பத்து மாதம் சுமந்தது அம்மா என்றால், நாம் வளரும் வரை தோளிலும் மார்பிலும் சுமப்பது நம் அப்பா தான். அவருடைய அர்பணிப்புக்கு சிறு சமர்ப்பணமாய் விளங்குகிறது தந்தையர் தினம். அப்பாவை நினைத்துப் பார்க்க அல்ல, அவரின் அன்பை, தியாகத்தைக் கொண்டாடி மகிழ அதைப் போற்றும் நாளாகவே தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. 

உலகின் 52 நாடுகளில், ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பிற நாடுகளில் பல்வேறு தேதிகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது அவருடன் நேரத்தைச் செலவிடுவது, அவருக்குப் பிடித்தமானவற்றை வாங்கி கொடுப்பது போன்றவை மேற்கொள்ளப்படுகிறன.

ஜூன் 19, 1910 முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சோனோரா ஸ்மாட் டாட்ஸ் என்ற பெண்மணியால் இந்த தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டு தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது தந்தையைப் பற்றிய எண்ணம் அவருக்குத் தோன்றியது.  ஜூன் 19, 1910-இல் அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அன்றுமுதல் அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கொண்டாடலாம் என்ற யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார். அன்று முதல் இன்று வரை ஜூன் 19-ஆம் தேதி தந்தையர் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். 

கருவறை தெய்வம் அம்மா நமக்கு காட்டிய முதல் கடவுள் அப்பா. பிள்ளையின் பாதம் நோகக்கூடாது என்று ஒவ்வொரு வினாடியும் தன்னை வருத்தி கொண்ட அப்பா நம்மிடம் எதிர்பார்ப்பது பரிசுப் பொருட்களை அல்ல, பாசத்தினை மட்டுமே. பாசத்தை அளவின்றி காட்டுவோம். காயப்பட்ட அப்பாவின் பாதங்கள் பூக்களால் வருடப்படட்டும்.

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.