சீ விளையாட்டு தீபம் அடுத்து  திரங்கானுவில் வலம் வருகிறது!

மலேசிய அரங்கம்
Typography

 

ஜொகூர் பாரு, ஜூலை.15- தொடங்கவிருக்கும் 29-ஆவது சீ விளையாட்டு மற்றும் 9 ஆவது பாரா விளையாட்டை முன்னிட்டு  'கோலாலம்பூர் தீப ஓட்டம்' அடுத்து ஜூலை 17ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை திரங்கானுவில் நடைபெறவுள்ளது.

சுமார் 235 பேருடன் திரங்கானுவின் பெசுட் மாவட்டத்தில் தொடங்கும் இந்த ஓட்டம், கெமாமான் மாவத்தில் முடிவடையும்.

முதல் பயணமாக வரும் திங்கள் (ஜூலை 17) மதியம் 1மணிக்கு எல்இடி தீபத்தை ஏந்தியபடி 8 முக்குளிப்பு வீரர்கள் பூலாவ் பெர்ஹெந்தியான் கடலில் தீப ஓட்டத்தைத் தொடங்குவர்.

அடுத்து ஓட்டம் மாலை 3.30 மணிக்கு, கோலா பெசுட் ஜெட்டியில் தொடங்கி பெசுட் மாவட்ட அலுவலகத்தில் முடியும்.

மறுநாள் (ஜூலை-18), இந்தப் பயணம் செத்தியா மாவட்டத்தில் தொடங்கி அதற்கு மறுநாள் (ஜூலை-19) உலுத் திரங்கானுவில் முடியும்.

தொடர்ந்து, வியாழன் (ஜூலை-20) காலை 7.30 மணிக்கு கோலா நெருஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள டத்தாரான் ஆஸ்டின்  தொடங்கும் இந்த ஓட்டம் காலை 9 மணியளவில் டத்தாரான் பெர்மாத்தா செபெராங் டாகீரில் முடிவுறும்.

அன்று மதியம் 3.30க்கு தொடங்கும் அடுத்த ஓட்டம் இஸ்தானா மசியா கோலா திரங்கானுவில் தொடங்கி டத்தாரான் பத்து பூரோக்கில் முடிவுறும். 21ஆம் தேதி ஜூலை மாராங்கிலிருந்து கெலுலுட் கடற்கரைக்கும் 22ஆம் தேதி ஜூலை அன்று டுங்கூனிலிருந்து சுல்தான் மிசான் சைனால் அபிடின் பொலிடெக்னிக்கும் ஜுலை 23ஆம் தேதி கிழக்கு கடற்கரை பெட்ரோனாஸ் அலுவலகத்திலிருந்து கெமாசிக் கடற்கரைக்கும் இந்த தீபம் கைமாற்றப்படும்.

இறுதியாக, ஜூலை 24ஆம் தேதி டத்தாரான் சுக்காயில் தொடங்கும் ஓட்டம் பகாங்-திரங்கானு எல்லையில் நிறைவடையும். அடுத்து, அந்த சீ விளையாட்டு தீபம் காலை 10மணியளவில் பகாங் பிரதிநிதியிடம் கொடுக்கப்படும்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS